மு. வ .கருவூலம்
நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்
வானதி பதிப்பகம் . 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17 . விலை 80
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் மு .வ அவர்களின் மாணவர் முனைவர் மோகன் என்ற நிலை உயர்ந்து , முனைவர் மோகனின் குரு மு .வ. என்ற நிலைக்கு வளர்ந்து விட்டார் .குருவை மிஞ்சிய சீடராக 82 நூல்கள் எழுதி விட்டார் .விரைவில் சதம் அடித்து விடுவார் .தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் ! என்ற நோக்கில் இலக்கிய ஆளுமை மு .வ .என்ற கடலில் முத்து எடுத்து ,முத்து மாலை தந்துள்ளார் .நாள் ஒரு சிந்தனை என்ற விதமாக வருடம் முழுவதற்குமாக 365 சிந்தனைகள் நூலில் உள்ளது .
சிறந்த சிந்தனையாளர் ,நேர்மையான அதிகாரி ,முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிந்தனையை இது போன்று தொகுத்து வழங்கி உள்ளார். அந்த நூலின் வெற்றியைத் தொடர்ந்து மு .வ .வின் சிந்தனைகளைத் தொகுத்து உள்ளார் . முனைவர் வெ.இறையன்பு அவர்கள், நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .முனைவர் மோகன் அவர்களின் உயரத்தை விட அவர் எழுதிய நூல்களை அருகில் அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டே ,பட்டிமன்றங்களில் நடுவராக முழங்கிக்கொண்டே ,நூல்களும் எழுதிக் குவித்திட நேரம் எப்படி? கிடைக்கின்றது என்று எண்ணிப் பார்த்து வியந்தேன் . எழுத்து ,பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றார் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . மு .வ .என்பவர் யார் ? என்பதை உணர்த்தும் உன்னத நூல் இது .
மு .வ .பற்றி அறிஞர்கள் குறிப்பிட்டது ,மு .வ .அவர்கள் அவரது படைப்புகளில் கருவாக வைத்த நல்ல முத்துக்களை தேர்ந்து எடுத்து நூலாக வழங்கி உள்ளார் .நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் குறிப்பிட்டது போல ,இந்த நூல் படிக்கும் வாசகர்களுக்கு மு .வ .அவர்களுடன் வாழ்ந்த மன நிறைவைத் தருவது உண்மை .சனவரி 1 தொடங்கி டிசம்பர் 31 வரை நாள் ஒன்றுக்கு ஒரு சிந்தனை இருப்பதால் .வாசகர்கள் தாங்கள் பிறந்த தேதியில் என்ன ? சிந்தனை உள்ளது என்று படிப்பது சுக அனுபவம்தான் .நீங்களும் சோதித்துப் பாருங்கள் .
ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள தகவலே நூலின் நோக்கத்தைப் பறை சாற்றி விடுகின்றது .
"பேராசிரியர் மு .வ .வை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் .
மு .வ.வின் நூல்களை இலக்கிய ஆர்வலர்கள் மறு வாசிப்பும் செய்யத் தூண்ட வேண்டும் என்ற இரண்டும் ஒருங்கே நிகழ வேண்டுமானால் ,என்ன செய்வது ,எப்படி நடைமுறைப் படுத்துவது என்ற சிந்தனையின் விளைவே இந்த நூல் ."
"அனைத்து கருத்துக்களும் அற்புதம் என்றாலும் ,நூல் விமர்சனத்தில் அனைத்தையும் எழுதி விட முடியாது. பதச் சோறாக சில உங்கள் பார்வைக்கு.
சனவரி 22.
ஒவ்வொரு தமிழரும் டாக்டர் மு .வ .வைப் போல வாழ்ந்தால் ,வளம் பெரும் தமிழ் ,வளம் பெறும் தமிழகம் ,வளம் பெறுவார்கள் தமிழர்கள்."
தமிழ்வாணன் ( கல்கண்டு ) 31.10.94
ஆவணப்படுத்துவதில் நூல் ஆசிரியர் இரா .மோகன்அவர்களுக்கு நிகர் அவர்தான் .கல்கண்டு இதழில் 31.10.94 அன்று வந்த தகவலை இன்று நூலில் பதிவு செய்துள்ளார் .
நம் இல்லத்தில் குழந்தைகள் கேள்வி கேட்டால் கோபப்படாமல் பதில் சொன்னால் அந்தக் குழந்தை அறிவாளி ஆகும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூலில் உள்ளது .
சனவரி 26
சைனாவில் சென்னை பசார் உண்டா ?
இளமையில் பள்ளிக் கூடத்தில் படித்த பொது நான் ஆசிரியரிடம் கேட்ட ஒரு கேள்வி நினைவிற்கு வருகின்றது .சென்னையில் சைனா பசார் இருக்கின்றதே சைனாவில் சென்னை பசார் உண்டா ? என்று கேட்டேன் .நீங்கள் எல்லாம் பேரியவர்களாகிச் சைனாவிக்குப் போய் வியாபாரம் செய்தால் அப்படி ஏற்படும் .என்றார் ஆசிரியர் .
யான் கண்ட இலங்கை பக் 44-45
மு .வ .அவர்களின் கருத்துக்கள் இன்றும் பொருந்தும் விதமாக உள்ளது .
பிப்ரவரி 18
வாழ்கையில் கணவனும் மனைவியும் முழுவதும் ஒத்துப் போவது அருமைதான் .நூற்றுக்கு நூறு கருத்து ஒற்றுமை உடையவர்கள் உலகத்தில் யாரும் இருக்க முடியாது .
அல்லி பக் 47 மார்ச் 22
இந்த நூலில் உள்ள மு. வ .அவர்களின் கருத்தைப் படித்து , வாழ்வில் கடைபிடித்து நடந்தால் குடும்பத்தில் சண்டை இருக்காது .அன்பு பிறக்கும் . இந்தக் கருத்தைப் புரிந்து நடந்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது .
மார்ச் 22.அறம் வெல்லும் பணம் தோற்கும் !அறம் வெல்லும் பணம் தோற்கும் !இந்த வெற்றியும் தோல்வியும் வந்தே தீரும் .
ஊழல் செய்த அரசியல்வாதிகளும் ,கிரானைட் அதிபர்களும் சிறையில் இருப்பது.மு .வ .வின் கருத்தை மெய்ப்பிப்பதாக உள்ளது .
மார்ச் 24.
உரிமை பறி போவது பெருங்குற்றம் !
பிறர் உரிமை பார்ப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு வாளா இருப்பதும் பெருங்குற்றம் !
இந்தக் கருத்தை படித்ததும் காவிரியில் உள்ள நமக்கான உரிமையை கர்னாடகம் பறிப்பதுக் கண்டு வாளா இருப்பதும் பெருங்குற்றம் என்பதை உணர்ந்தேன்.
வாழ்வியல் கருத்துக்கள் ,தத்துவங்கள் ,நெறி முறைகள் ,தனி மனித ஒழுக்கத்தின் சிறப்பு இப்படி நூல் முழுவதும் பொக்கிசமாக உள்ளது .
பறவைகள், விலங்குகள் ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதில்லை ,அதனால்தான் அவைகளுக்கு நோய்கள் இல்லை ஆனால் மனிதன் ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால்தான் நோய் வருகின்றது .என்ற மருத்துவ உண்மையும் நூலில் உள்ளது .
செப்டம்பர் 2
நல்லவர்களாக ஒரு சிலர் கிடைத்தால் போதும் .
நல்லவர்களாக ஒரு சிலர் இந்த உலகத்தில் கிடைத்தால் போதும் பலருடைய பழக்கமும் அறிமுகமும் வேண்டியதில்லை .அப்படிப்பட்ட சிலருக்கு இடையில் வாழ்ந்து மகிழ்ச்சியோடு செத்துப் போகலாம் .
அல்லி பக் 231
எனக்கு கிடைத்த நல்லவர் சிலரில் ஒருவர் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .மற்றொருவர் முனைவர் வெ.இறையன்பு .
படித்துவிட்டு வைக்கும் சராசரி நூல் அல்ல இது .படித்து விட்டு பாதுகாப்பாக வைத்து ,மனதில் கவலை ,துன்பம் வரும் நேரம் எடுத்து மறு வாசிப்பு செய்தால் புத்துணர்வு வர வைக்கும் அற்புதம் இந்த நூல் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக