"யாதும் ஊரே" நூல் வெளியீட்டு விழா !

"யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா !
தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ,அவர் எழுதிய "யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா கல்லூரி விடுதி மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் திருக்குறள் பேரவை சார்பிலும் நடைபெற்றது .கவிபாரதி அசோக்ராசு வரவேற்றார் , கவிஞர் மார்சல் முருகன் அறிமுக உரையாற்றினார் .முனைவர் இ.கி.இராமசாமி தலைமை  வகித்து   நூலை வெளியிட்டார்  .பேராசிரியர் ஞா .விக்டர் ,ஆசிரியர் கல்யாணி இருவரும் பெற்றுக்  கொண்டனர். தமிழ்த்தேனீ  முனைவர் இரா .மோகன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். கவிஞர்கள் வீரபாண்டியத்  தென்னவன் ,கா .கருப்பையா ,இளங்கவின், அருட் தந்தை ஆனந்தராசு வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர் இரா .இரவி நூல் ஆசிரியருக்கு பொன்னாடைப் போர்த்தி நூலினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் வா .மு .சே .திருவள்ளுவர்  ஏற்புரையாற்றினார் .கவிஞர் இராம பாண்டியன் நன்றி கூறினார். தேசியவலிமை வே .சுவாமிநாதன் ,திருமதி பரிமளா திருவள்ளுவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்

கருத்துகள்