ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ   கவிஞர் இரா .இரவி .
கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை !
கிடைக்காததற்கு ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை !

ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில் !

பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம் !

நாட்டு நடப்பு       நேற்றைய நவீனம்
இன்
றைய நவீனமன்று !

பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி !

காயம் இல்லை
மரத்திலிருந்து விழுந்தும்
இலை !  

மரமானதற்கு 
வருந்தியது
சிலுவை மரம் !

தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம் !

அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி !

பசிபோக்கும்
அட்சயப் பாத்திரம்
அவள் முகம் !

உணர்த்தியது
பொதுவுடைமை
செம்பருத்திப் பூ !

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை ! 


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்