காதல் ! கவிஞர் இரா .இரவி .

காதல் !         கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்  மெய்
காதல் !

தன்னை மறந்து
துணையை நினைக்கும்
காதல் !   

அனுபவம்  இனிமை
நினைத்திட இனிக்கும்
காதல் !   

காவியம் தொடங்கி
கணினி வரை இன்பம்
காதல் !   

ஒரே அலைவரிசையில்
இரண்டு மனங்கள்
காதல் !   
மூளையின் மூலையில்
இட ஒதிக்கீடு
காதல் !

உயிர் உள்ளவரை
ஒட்டியிருக்கும் நினைவு
காதல் !

அகத்தில் தோன்றி
முகத்தில்  மலரும் காதல் !

சிறகுகள் இன்றி
வானில் பறக்கலாம்
காதல் !

சிந்தைக்கு வழங்கிடும் 
புதுத்தெம்பு
காதல் !

கர்வம் தந்து
கர்வம் தகர்க்கும்
காதல் !

விழிகளில் தொடங்கி
மூளையி
ல் முடியும் காதல் !

ஈடு இணையற்றது
இணையோடு இணைப்பது
காதல் !

வென்றால் இன்பம்
தோற்றால் துன்பம்
காதல் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்