ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ    கவிஞர் இரா .இரவி .

ஆசைப்பட்டது காளான்
ஆசையை வெறுத்த
புத்தரின்  உயிர் !


அடைந்தான்  பரவசம்
சுனாமியில் தொலைந்த மகன்
கண் முன்னே !


இயற்கையை நேசிக்க 
இதமாகும்
இதயம் !


இருக்கட்டும் தூய்மையாக
இரண்டும்
அகமும் புறமும் !

தேவையில்லை
ஏழைகளின் வீட்டிற்கு   
 பூட்டு !

பெண்களுக்கு அழகு
பொன்னகையை விட
புன்னகை !

வான் மேக
சிக்கி முக்கி உரசல்
மின்னல் !

மனிதனின்
முதல் நவீனம்
மொழி !

முட்டாள்
மகுடி
துகிறான்
காதில்லாப்  பாம்பிடம் !

அழிவிற்கு
 
வழி வகுக்கும்
ஆயுதம் !

உணர்ச்சி வசமின்றி
அறிவுவசம் எடுப்பது
உத்தி !
 

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்