குழந்தை ! கவிஞர் இரா .இரவி .

குழந்தை !                  கவிஞர் இரா .இரவி .

உள்ளது உள்ளபடி
உரைக்கும் காந்தி
குழந்தை !

உடைந்தது பொம்மை
உடைந்தது மனசு
குழந்தை !

செல்வங்களில்
உயர்ந்த செல்வம்
குழந்தை !

உலகின் முதல் மொழி
உன்னதமான மொழி
குழந்தை !

குழல் யாழ்
வென்றது
குழந்தை !

கவலை நீக்கும்
இன்பம் தரும்
குழந்தை !

பிழையாகப் பேசினாலும்
பேசுவதே அழகு
குழந்தை !

கருவில் உருவான
விசித்திர விந்தை
குழந்தை !

சாதி மத பேதம்
அறியாதது

குழந்தை !

சிரிப்புக்கு இணையான
பூ உலகில் இல்லை
குழந்தை !

கருத்துகள்