ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ       கவிஞர் இரா .இரவி .

விடுதலை கேட்டவர்களை
வீதியில் நிறுத்தியது
இலங்கை !

சுதந்திரம் கேட்டவர்களை
சோகத்தில் ஆழ்த்தியது
இலங்கை ! 

குடும்பங்களைச்  சிதைத்து
கோரத்தாண்டவம்  ஆடியது

இலங்கை !

தண்ணீர்த் தீவை
ண்ணீர்த் தீவாக்கியது
இலங்கை !

ஆணவத்தின்  உச்சம்
திமிரின் எச்சம்
இலங்கை !

மனிதாபிமானம் மறந்து
விலங்கானது
இலங்கை !
தமிழருக்கு வழங்கிய நிதி
சிங்களருக்குப்  பயன்படுத்தும்
இலங்கை !

குரங்கின் கையில்
பூ மாலையாக தமிழர்
இலங்கை !

பாலுக்கு பூனை காவல்
தமிழ
ருக்கு சிங்களர் காவல் இலங்கை !

நாய் வால் என்றும் நிமிராது
குணம் என்றும் மாறாது 
இலங்கை !

மன்னிக்க மாட்டார் புத்தர்
மவ்னி
களான புத்தப்பிச்சுகளை இலங்கை ! 

வணங்க  வேண்டாம்  புத்தரை
புத்தரின் வேண்டுகோள்
இலங்கை ! 

புத்தரின் போதனை மறந்து
எலும்பு வாங்கி பயனேது
இலங்கை ! 

என்று விடியும்
ஏக்கத்தில் தமிழர்
இலங்கை ! 

புறத்திற்கு போடலாம் முள்வேலி
அகத்திற்கு ?
இலங்கை ! 
ரத்த வெறியனுக்கு
ரத்தினக் கம்பளம்
இந்தியா !

கருத்துகள்