ஒளியின் நெசவு !நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765


விமர்சனம் 
கவிஞர் இரா .இரவி.

ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் .  விலை ரூபாய் 60.

ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு  துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு .  மரபுக்கவிதைக்கு நிகர் மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .தமிழ்த்தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக  உள்ளது .

எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை
ன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
பதியின் வைகைதனில் நீந்தினாள் . 
சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

குழந்தாய் ! நீ குழைந்தாய்  நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப்
பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .


உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக்  கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில் 
நான் மறையும் தோற்கும் !


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை சூட்டுவதாக  உள்ளது .

காதல் மாண்பினை குயிலின் மூலமாய்
கூவினாய்  - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ  - எண்கள் - கிழக்கு நீ !


மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் . 

ஒளியின் நெசவு !
-------------------------------
அழுது வடியும்  மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !


இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளி மாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு  ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும். என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !

வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !    

கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .

செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே  இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .
 
வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !


பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .

பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா  யானால்
பலம் ,பல மடங்கா
ய்க் கூடும் !

தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .

நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?


அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு ழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .

கைகளுண்டு மனிதர்க்கு விலங்கு
க் கில்லை கடினமுடன் உழைக்கத்தான்  அவையி ருந்தும்
செய்கையிலே போய்
கூடி ழல் மூலம்
கை
யூட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !

சிந்திக்க வைக்கும் கவிதைகளை,ச
மூகத்தை சீர் படுத்தும் கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .

கருத்துகள்