" அகவிழி " பார்வையற்றோர் விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து 5 வது ஆண்டு ரத்ததானம் மற்றும் விழிதான விழிப்புணர்வு முகாம் மற்றும் நடைபெற்றது

" அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து  5  வது   ஆண்டு ரத்ததானம் மற்றும்  விழிதான விழிப்புணர்வு   முகாம் மற்றும்  நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி இருவரும்  5  வது ஆண்டாக ரத்ததானம்  வழங்கி தொடங்கி வைத்தனர் . மாமன்ற உறுப்பினர்கள் திரு ஜீவானந்தம் ,திரு .புதாகீர் இருவரும் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் . " அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மாணவ மாணவியரும் ,மதுரை புதூர் பகுதி வாழ் இளைஞர்களும், பொது மக்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள் .டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று அரசு ராஜாஜிமருத்துவமனை ரத்ததான ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் அவர்களின் முயற்சியில் செண்பகம் மெட்டல் அதிபர் திரு லிங்கமணி அவர்கள் நன்கொடையாக 7  வது ஆண்டாக வழங்கிய புத்தாடைகளை அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு கவிஞர் இரா .இரவி வழங்கினார் .  அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
( பார்வையற்ற )திரு எம் .பழனியப்பன் .உடன்
இருந்து விழாவிற்கான ஏற்பாடுகள் செய்து இருந்தார் .

--

கருத்துகள்