தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் ஆற்றிய உரை .
தலைப்பு; நாமும் நம் மொழியும்
விழா ஏற்பாடு திரு பி .வரதராசன் ,புரட்சிக் கவிஞர் மன்றம்.
தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
பாராட்டுக்குப் பாராட்டு தேவையற்றது .பாராட்டு ,சடங்கை தவிர்க்க வேண்டும் .நம் ஆற்றல் வீணாகி விடும் .சோம்பலை சுட்டெரித்தவன் நான் .தாமஸ் ஆல்வாய் எடிசன் அவர்களிடம் உங்களுக்கு 80 வயது ஆகின்றது .என்றனர் .அவர் சொன்னார் ."ஒரு மனிதன் எட்டு மணி நேரம் உழைக்கிறான் . எட்டு மணி நேரம் ஒய்வு எடுக்கிறான் .எட்டு மணி நேரம் உறங்குகிறான் .ஆனால் நான் அப்படி அல்ல பல மணி நேரம் உழைப்பவன் .எனவே அப்படிப் பார்த்தால் என் வயது இரு நூறு ஆகும் ."என்றார் .உழைப்பு உழைப்பு என்று இருப்பவர்கள் சாதனை புரிகிறார்கள் . இது வரை நான் பெற்ற விருதுகள் 60. இப்போது பெற்றதும் சேர்த்து 61.வேண்டாம் என்று தட்டிக் கழித்தவைகள் நிறைய .தமிழ் மொழிக்கும் ,தமிழ் இனத்திற்கும் கேடாக இருப்பவர்கள் தரும் விருதை நான் பெறுவதில்லை .
5 லட்சம் தந்தார்கள் அதை அப்படியே நிலையான வைப்பில் வைத்து அதிலிருந்து வரும் வட்டியில் எனது நூல்களை வரியாக வெளியிட உள்ளேன் .முதல் நூல் " தமிழ் ஆயிரம் ."
இந்தி திணிப்பு வந்தது அப்போது "கொடிது கொடிது" என்று கவிதை எழுதினேன் . 18 பேர் கொண்ட குழு இருந்தது .மூன்று முறையும் ஆங்கிலம் ஆட்சி மொழி என்று 9 வாக்குகள் வந்தது .இந்தி ஆட்சி மொழி என்று 9 வாக்குகள் வந்தது .பெரிய மனிதர் என்று சொல்லப்படும் பேராயக் கட்சியை சேர்ந்த ராசேந்திர பிரசாத் குழுவின் தலைவர் .அவர் என் வாக்கினை இந்திக்கு தருகிறேன்.இந்தியை ஆட்சி மொழி ஆக்குகிறேன் என்று சொல்லி இந்தியை திணித்தார்கள் .
பெரிய மனிதர் என்று சொல்லப்படும் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் சர்வபள்ளி என்ற உரை ஆந்திராவோடு சேர்த்தார் .பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்களாக நடந்து கொள்ள வில்லை .அன்று தொடங்கி இன்று வரை வடவர்கள் தமிழையும் ,தமிழர்களையும் வஞ்சித்தே வருகின்றனர் .தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள்தான் .அவர்கள் உலகம் முழுவதிலும் வாழ்கின்றார்கள். 11000 பேர் மட்டுமே உள்ள ஒரு தனி நாடு உலகில் உண்டு .இலங்கையில் ஈழம் ஏன் ? தனி நாடு ஆக கூடாதா ? ஏன் தடுக்கிறார்கள் .அங்கே அவர்கள் அஞ்சல், மருத்துவம், பொறியியல், நிர்வாகம்அனைத்தும் தமிழில் நடத்தினார்கள் .
நம் வாழ்வில் நாம் என்ன ? செய்ய வேண்டும் .
நம் பெயர் தமிழில் இருக்க வேண்டும் .முன் எழுத்து தமிழில் எழுத வேண்டும் .ஆங்கிலேயர் தன் முன் எழுத்தை வேறு மொழியில் எழுதுவார்களா ? இந்த அவலம் தமிழில் மட்டுமே நடக்கின்றது .பெயர் தமிழாம் . தலை எழுத்து ஆங்கிலமாம் .ஒரு நாளிதழில் வந்த 12 பெண் பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லை . ஈழத்தில் இருந்த ஒரு ஆங்கிலேய மருத்துவர் தமிழ் படித்தார் .காரணம் .அவர்கள் மொழியில் என்ன ? நோய் என்று நான் அறிந்தால்தான் மருத்துவம் சிறக்கும் .தமிழ் கற்று மருத்துவ முறைகளையும் தமிழில் எழுதி வைத்தார் .
ஈழத்தில் இருந்த சைவ அறிஞர் ஆறுமுக நாவலர் ஜப்பான் என்ற சொல்லை யப்பான் என்றே எழுதுவார். அவரிடம் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள் என்றார்கள் .அவரும் சரி என்று சொல்லி, மொழி பெயர்க்க முன் வந்தார் .அனால் அவரிடம் நீங்கள் அணிந்திருக்கும் திருநீரை அழித்து விட்டு வாருங்கள் .என்றார்கள் .அதற்கு அவர் மறுத்து விட்டார் .நான் என் சமயத்தை உங்கள் மீது திணிக்க வில்லை .நீங்கள் உங்கள் சமயத்தை என் மீது திணிக்காதீர்கள் .என்றார் .
தமிழர்களே உங்கள் பெயரை தமிழாக்குங்கள் .தமிழில் சொற்களுக்குப் பஞ்சம் இல்லை. 6 லட்சம் கலைச் சொற்கள் உருவாக்கி உள்ளனர் .
பாவாணர் சொல்வார் .
" தமிழனுக்கு சோற்றுப் பஞ்சம் இருக்கலாம் .
தமிழனுக்கு சொற்ப் பஞ்சம் இருந்ததில்லை ."
தமிழ் சொற்கள் அனைத்துமே காரணமானவை. துள்ளி வந்தது துளிர் .பழுத்தது பழுப்பு .சரக்கு என்றால் காய்ந்தது என்று பொருள் .அதில் இருந்து வந்ததுதான் பல சரக்கு கடை .கூடிய வரை தமிழில் பேசுங்கள். இரண்டு தெலுங்கர் சந்தித்தால் தெலுங்கில் பேசுகின்றார் .இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகின்றனர் .ஆனால் இரண்டு தமிழர் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அவலம் ஒழிய வேண்டும் .தமிழில் பேசுங்கள் .உரையாடல்கள் அனைத்தும் செம்மையான தமிழில் பேச வேண்டும் .தமிழகத்தில் ஒரு ஆட்சியாளர் தொடங்கிய தமிழ்ப் பணியை அடுத்து வரும் ஆட்சியாளர் தொடர்வது இல்லை .கடந்த ஆட்சியாளர் தமிழ் பள்ளிகளை ஒழித்து ஆங்கிலப் பள்ளிகளை திறந்தார்கள் .
கடிதங்கள் எழுதுவதை அறவே விட்டு விட்டனர் .பாவாணர் வரலாறு எழுத எனக்கு துணை நின்றது அவர் கடிதங்கள்தான் .பாவாணர் பிறந்த ஊர் பற்றி பலரும் பல சொன்னார்கள் .ஆனால் அவர் கைப்பட எழுதியது " நான் பிறந்த ஊர் சங்கரன் கோயில் ". அவர் கற்ற மொழிகள் 30 .அவரே எழுதி வைத்துள்ளார் . கால வரிசையில் எழுதி வையுங்கள் . உங்கள் எண்ணத்தை எனக்கு எழுதுங்கள் .நான் பதில் எழுதுவேன்.
நாவலர் பாரதியார் என் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் என்னிடம் பத்திரமாக வைத்துள்ளேன் . என் தந்தை பெயர் ராமு ,தாத்தா பெயர் முத்து .பாட்டி பெயர் அருளாயி. தாத்தா முத்து வின் அப்பா பெயர் ஈசுவரன் .மூன்று பரம்பரைதான் தெரிகின்றது .ஆவணப் படுத்தி இருந்தால் பல தலைமுறை தெரியும் . தற்குறிப்பு எழுத வேண்டும் .ஆசிரியர்கள் பெயர்கள் ,அவர்கள் செய்த உதவிகள் . என்னிடம் 75 நாட்குறிப்புகள் காணலாம். 12 வயது முதல் எழுதி வருகிறேன் .கவிதை கட்டுரை ,செல்ல வேண்டிய இடம் என தனித்தனி குறிப்புகள் எழுதுவேன் . தினந்தோறும் நீங்கள் படிக்கும் நல்ல செய்திகளை குறித்து வையுங்கள் .
கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஜப்பான்காரர் . சக்கரத்தில் மலைக்கு 16000 அடி தூரம் சென்றார். என்ற தகவல் படித்து வியந்தேன் . என் மாணவி 14 வயதில் கைம்பெண் ஆனாள்.அதைக் கண்டு நான் ஒரு கவிதை எழுதினேன் . ஆல் இலை உதிர்ந்தது கண்டு " மாந்தன் என்ன மாந்தனோ " ஒரு கவிதை வடித்தேன். இப்படி உணர்ந்தவைகளைப் பதிவு செய்ய வேண்டும் . உங்களுக்கு உரைநடை வரும் என்றால் உரைநடை எழுதுங்கள் .பெரியவர்களை சந்தித்தால் பதிவு செய்து வையுங்கள் .நான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனை என் 17 வயதில் சந்தித்தேன் .அவர்கள் அறிவுரை சொன்னால் அதனை பதிவு செய்து வையுங்கள் .
என்னுடைய தவச்சாலையில் எழுதி வைத்துள்ளேன் .
"பார்க்கும் இடமெல்லம்
பல்கலைக் கழகம் "
"எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டால்
ஏமாற்றம் இல்லை "
பேருந்தில் பயணிக்கும் போது , எழுதிக் கொண்டே செல்வேன் ." இடைச்சொற்கள் "என்ற நூல் அப்படி எழுதியதுதான் .
பட்டறிவை பதிவு செய்யுங்கள் .ஒரு இனிப்பு கடைக்காரர் .கடைக்கு வருபவர்களை அய்யா வாங்க ! அம்மா வாங்க! என்பார் .கடைக்கு விளம்பரம் உங்க முகம்தான் என்றேன் .அவரிடம் .முத்தனேந்தல் என்ற ஊர் .அங்கு இறங்கி,பழைய கோட்டைக்கு நடந்து சென்றேன் .வெயில் நேரம் .வாய்காலில் தண்ணீர் ஓடியது .கரையில் ஒரு கால் வைத்துக் கொண்டு மறு காலை தண்ணீரில் வைத்தேன் .அந்த இடம் உள் வாங்கும் மண் உள்ளது .இதைத்தான் திருவள்ளுவர் மட்பகை ,உட்பகை என்கிறார் என்பதை உணர்ந்தேன். பரிமேல் அழகர் தொடங்கி பாவாணர் வரை தவறாக பொருள் எழுதி விட்டனர் .நான் மதிக்கும் மிகச் சிறந்த அறிஞர் பாவாணர் என்றாலும் .அவருடைய உரையில் பல இடங்களில் நான் வேறுபடுகிறேன் .70 கோடி எதிரிகள் இருந்தாலும் உட் பகை அழித்து விடும்." மண்ணே பகையாக இருக்கும்" என்று பொருள் எழுதினேன் .
என் தந்தை வீடு கட்டும்போது அவர் நண்பர் வண்டி மாடு கொடுத்து உதவினார் .வண்டி வீடு கட்ட கல்கள் ஏற்றி வரும் போது வரப்பில் சரிந்து மாடு இறந்து விட்டது .உடன் என் தந்தை 50 ரூபாய் கொடுத்து மாடு வாங்கி வரச் சொன்னார் .வண்டிக்காரர் அவர் நிலத்தில் பருத்தி விளைந்ததும் விற்று 55 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார் .ஆனால் என் தந்தை வாங்க மறுத்தார் .என் வேலைக்கு போகும் போது இறந்து இருந்தால் ,எனவே இருவரும் பணத்தை வாங்க மறுக்கவே .பின் வண்டிக்காரர் 5 ரூபாய்எடுத்துக் கொண்டு ,50 ரூபாய் கொடுத்து விட்டுப் போனார் .அந்தக் குடும்பத்துடன் ஆறு பரம்பரையாக தொடர்பில் உள்ளோம் .
பாரதி தாசன் என்னை வாழ்த்தி கடிதம் எழுதினார் .செம்மொழிக்கு 4900 பக்கம் எழுதி தந்தேன் .6000 பக்கங்கள் எழுதி உள்ளேன் . வீட்டில் பல்வேறு அறைகள் கட்டுகின்றோம்.ஒவ்வொரு வீட்டிலும் நூலக அறை வேண்டும் .நூலகம் குழந்தைகளுக்கும் பாலகம் .முதியவர்களுக்கு மேலகம் .புத்தகம் இல்லையேல் பித்தாகும் வீடு .

கருத்துகள்
கருத்துரையிடுக