அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !
நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501
நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .
திரு பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .
திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத் தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .
இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .
வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .
திருக்குறள் பற்றி ம .பொ.சி. அவர்களின் கருத்து நூலில் உள்ளது .
" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .
இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் ."
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !
" திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.
" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .
வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் பார்வையில் திருவள்ளுவம் .
வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம் அதுவே .
தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .
கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .
அறிஞர் அண்ணா பார்வையில் திருக்குறள் .
ஒரு பெரிய பாராங் கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .
தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .
திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக