தாண்டவம் !
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர்
விக்ரம் கூட்டணியில் படம் .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .
காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார் . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து உள்ளது தெரின்றது .ஆங்கிலம் பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கமல ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான். என்று அறுதி இட்டுக் கூ றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை வைத்தே யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் . கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி இருப்பார்கள் .
திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான் நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக் கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால் நாட்டில் மணவிலக்கு வராது .
படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி ,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள் .மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண் அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா ! என்று செல்லிடப் பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர் .விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில் முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் . மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத் திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன் எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால் காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ? என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான் காவல் உயர் அதிகாரி என்பது மனைவிக்கு தெரிகின்றது .
மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ வாசிப்பில் தேறி விடுகிறார் .
பார்வையற்றோர் ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக் கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில் துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு , பார்வையற்ற விக்ரமை கொடூரமாக தாக்கும் காட்சி பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம் பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து விட்டாரா ? என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் .
படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள் ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது. விக்ரம் காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும் காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து உள்ளார். நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் .
ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று . எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது நீ அழகு இல்லை என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர் துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.
அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான, மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத்த தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை! உன் கதை ! என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு வருகிறது .
நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
http://www.noolulagam.com/ product/?pid=6802#response

www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.
http://en.netlog.com/
http://www.noolulagam.com/
கருத்துகள்
கருத்துரையிடுக