தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத் தலங்களில் தூய்மையைப் பேணும் விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத்  தலங்களில் தூய்மையைப் பேணும் விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத்  தலங்களில் தூய்மையை பேணும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ,திருமலைநாயக்கர்  அரண்மனைக்கும் குப்பைகள் போடும் பெட்டியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்கள்  கோயில் இணை ஆணையரிடமும் ,அரண்மனை உதவி இயகுனரிடமும் வழங்கினார் .இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் ,மாநகராட்சி பொறியாளர்களும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும் கலந்து கொண்டனர் . விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி  வைத்தார்கள் .பேரணியில் ஓரியண்டல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளும் ,அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் ,ஆயிரம் வைசிய    மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் ,சுற்றுலா வழிகாட்டிகளும் கலந்து கொண்டனர் .சுத்தம் ,சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப் பட்டது .விழாவிற்கான ஏற்பாடுகளை சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,நெல்சன் ,மற்றும் பணியாளர்கள் செய்

கருத்துகள்