படித்ததில் பிடித்தது ! ஹைக்கூ முனைவர் ச.சந்திரா.

படித்ததில் பிடித்தது !

ஹைக்கூ  முனைவர்  ச.சந்திரா.

விட்டுக்கொடுப்பதும்
 தட்டிக் கேட்பதும்
 நட்பு!

சோலையிலும் பாலையிலும்
 கரங்கொடுப்பது
 நட்பு!

தற்பெருமை தலைக்கனம்
துளியும் இல்லாதது!
நட்பு!

வரவுசெலவு கணக்குவழக்கு
என்றும் பார்க்காது!
நட்பு!

எதிர்பார்ப்பு இல்லாதது!
ஏமாற்றம் காணாதது!
நட்பு!

கண்ணீரைப் பன்னீராக்கும்!
கனலைச் சந்தனமாக்கும்!
நட்பு!

இன்பத்தை இருமடங்காக்கும்!
துன்பத்தைச் சரிபாதியாக்கும்!
நட்பு!

இமயத்தை எட்டும் தூரமாக்கும்!
குமரியைக் கூப்பிடும் தூரமாக்கும்!
நட்பு!
       

கருத்துகள்