கொடிது ! கொடிது ! தீ கொடிது ! கவிஞர் இரா .இரவி .

கொடிது ! கொடிது  ! தீ கொடிது !  கவிஞர் இரா .இரவி .

வாழ வேண்டிய உயிர்களைக்  குடிக்கும்
வஞ்சனை மிக்க தீ
கொடிது !

தீபாவளி நெருங்குவதால் விரைந்து முடிக்க
முதலாளி நெருக்கியதால் வந்த விபத்து !

தீபாவளி வெடி தயாரித்த தொழிலாளிகளே
தீபாவளி வெடியாகி வெடித்து விட்டார்கள் !

விதிகளைக்   கடைபிடிக்காமல்  முதலாளிகள்
விதி
களை மீறியதால் வந்த கொடிய விபத்து !

அளவிற்கு அதிகமான ரசாயனம் இருப்பு
அதிகமானோரின் உயிர்கள் பறிப்பு !
தீயை வேடிக்கைப்  பார்த்தவர்களும் மரணம்
தீயிலிருந்து  காக்கச் சென்றவர்களும் மரணம் !

பெருமையாக சிவகாசி குட்டி ஜப்பான் என்கின்றோம்
பெரிய அளவில் மருத்துமனைகள் இல்லை !
மிகப்பெரிய  மருத்துவ மனையை சிவகாசியில்
முதலில்  கட்டுவதற்கு ஆவன  செய்யுங்கள்
!

கவனம் கவனம் உயிர்கள் பதனம்
கவனக் குறைவால் உயிர்கள் இழப்பு !


இழந்த உயிர்கள் போதும்  ! போதும் !
இனிஒரு  உயிர்
கூட இழக்கக் கூடாது !

இறந்தவர்கள் அனைவருமே வாழ வேண்டிய
இளம் வயதினர்கள்தான் முடிந்தது கதை !

எத்தனை லட்சங்கள்   கொடுத்தாலும்
இழந்த உயிருக்கு ஈடாகுமா?

அப்பாவை இழந்து அழுகுது குழந்தை !
அம்மாவை இழந்து வருந்துது 
குழந்தை !

அவர்கள் உயிர்களைப் பணயம் வைத்து
உங்களுக்கு தரும் வெடிகள் தேவையா ?

உங்கள் மகிழ்ச்சிக்காக வெடி தயாரித்தவர்கள்
அவர்களின் உயிர்களை இழந்து விட்டனர் !

வெடி தேவைதானா ? சிறிது சிந்தியுங்கள் !
வெடி வெடிக்காமல் இருங்கள் இந்த வருடம் !


கருத்துகள்