முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !
தமிழக மீனவர்களை சிங்கள இன வெறிப்படை
தினமும் தாக்குகின்றான் தடுக்க நாதி இல்லை !
நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !
கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !
தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த சிங்களப்படைக்கு
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !
இறந்த பிணங்களையும் எட்டி உதைத்த சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !
தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள் உடைந்து விடும் என்கின்றனர் !
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத் தடுக்கின்றனர் !
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்றனர் !
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !
தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளைப் பெருக்கி விட்டனர் !
ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !
பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி
பூகம்பம் வருவதற்கு வழி வகுத்து விட்டனர் !
மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான அரசியல்வாதிகளே உள்ளனர் !
தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !
கருத்துகள்
கருத்துரையிடுக