ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                        கவிஞர் இரா .இரவி

மருந்தளித்தார்
மனிதநேயத்தோடு
மலையாள நடிகர்
தமிழக ந
டிகர்கள் ?

எந்த விலை ஏறியபோதும் வருந்தாதவன்
மது விலை ஏறியதும் வருந்தினான்
குடிமகன் !


நேர்மையின் சின்னம்
திருவாளர் பரிசுத்தம்
சொத்து பத்து கோடி !

கடவுச்சீட்டு  இன்றி
பல நாடு பயணம்
உரத்த நாடு ! வருசை நாடு !

சகல சக்தியோடு அவாள்
குடியரசுத்தலைவரை
ஆசிர்வதிக்கும் அவாள் !


மழைக்கான
மேளமும் விளக்கும்
இடி மின்னல் !

ரசிப்பதும் சுகம்
நனைவதும் சுகம்
மழை !


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதிரி
நிலவும் அவளும் !


நிலவு
உருட்டிய
சோளிகள்
நட்சத்திரங்கள் !

மழைக்கான
பச்சைக் கொடி
பசுமை ! 


கருத்துகள்