மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !

நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17.   விலை ரூபாய்  60 .
  

தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது எழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற ந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து  பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள். 

காந்தியடிகள்  அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .
 
"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கிறாய் .இதில் ஒன்றும் இல்லை .தீமைக்கு மாறாக நன்மை செய்வதில் தான் அழகு உண்டு .என்னும் கருத்துள்ள வாக்கியம் இது. பிறகு
யேசுவின் மலைப் பிரசங்கம் என்னை ஆட்கொண்டது ."

காந்தியடிகள் தொட
ங்கி வாலஸ் வரை பல மேதைகளின் வெற்றி ரகசியங்கள் நூலில் உள்ளது .
"மன வலிமையே பலம்" என்று சொன்ன விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு !

விவேகானந்தர்  வீட்டு வாசலில் நின்ற  போது கந்தலான துணி அணிந்து வந்த ஒரு துறவி "நீ உடுத்தியிருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா ? என்று கேட்டதும் உடன் தன்னுடைய ஆடைகளை கழற்றித்  துறவியிடம் தந்து விட்டார் .இந்த அன்பு உள்ளம் தான் அவரை பிற்காலத்தில் அன்பு உருவாக் காட்சி அளிக்க காரணமாக இருந்தது .

இப்படி சுவையான புதிய தகவல்கள் நூலில் உள்ளது .நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வாழ்வியல் நெறி போதிக்கும் அற்புத நூல் இது .
எழுத்தாளர் மெர்வின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல வருடங்களுக்கு முன்  மதுரை வந்து இருந்த போது இனது கவிதை நூல்களை படித்து விட்டு  பாராட்டி விட்டு .எதிர் மறை கருத்து  இருந்த ஒரு சில கவிதைகளைச் சுட்டி விட்டு , இனி வரும்காலங்களில் எதிர்மறை சிந்தனை தவிர்த்து எழுதுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .அவர் அன்று சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன் .இந்த நூலிலும் ,அவரது எந்த நூலிலும் எதிர்மறை கருத்துக்களை காண முடியாது .

வாழ்க்கையில் யார் ? யார் ? என்னென்ன எதிர்மறை வார்த்தைகளை சொன்னார்களோ அதன் படியே தான் அவர்களுக்கு நடந்திருக்கிறது .
யாரவது சுடுவார்கள் என்றார் காந்தியடிகள். அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. .எனவே யாரும்   எதிர்மறை சொற்கள் பயன் படுத்தாமல் இருந்தால் நன்மை உண்டு .

ஆடம்பரமாக ஆடை அணிந்து பணத்தை விரையம் செய்பவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ள ஒரு நிகழ்வு .

அலெக்சாண்டர் எப்பொழுதும் தமது மிகக் கீழான அலுவலர் போலவே எளிமையான உடைகளியே அணிந்து கொள்வார் .என்ற தகவல் நூலில் உள்ளது .


காதல் அன்றும் ,இன்றும் ,என்றும் சுகமானதுதான் .நெப்போலியன் காதலியின் கடிதத்தை சட்டைப் பையிலேயே வைத்து இருப்பாராம் .அவர் காதலிக்கு  எழுதிய கடிதத்தில்  , "  எனக்கு சோர்வு ஏற்படும்போது காதலியின் கடிதத்தை எடுத்து படித்தவுடன் சோர்வு பறந்துவிடும் ,புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும் ,அப்புறம் பசியாவது தாகமாவது .துன்பம் என் நண்பன் .அதை நான் வெறுக்க மாட்டேன் ." இவ்வாறு எழுதி உள்ளார் நெப்போலியன் .

முதுமை பருவத்தில் திருமணம்  செய்து கொண்ட ஒரு நீதிபதி சொல்கிறார் ."இத்தகைய மனைவி கிடைக்க இவ்வளவு காலம் காத்திருந்தது நல்லது என்று மகிழலாம் .அல்லது அவளது பண்புகள் எனக்குப் பிடிக்காதவைகளாக இருந்தால் ,இன்னும்  கொஞ்ச காலம்தானே இவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று மன அமைதிப் பட்டுக் கொள்ளலாம் ." துன்பத்திற்கு துவளாத மன பக்குவம் போதிக்கும்  கருத்துக்கள் உள்ளது .

ஆண்ட்ரு ஜாக்சனுக்கு திருமணதிற்கு முன் எழுத படிக்க தெரியாது .அவரது மனைவி அவருக்கு  எழுத படிக்க கற்றுக் கொடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் துணை நின்றார் .சர்ச்சில் அதிர்ச்சியான நிகழ்சிகள் நடக்கும் போது தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத்  தொடர்வார் .இப்படி பெண்மையின் மேன்மை உணர்த்தும் தகவல்கள் உள்ளது .

பாபர் 26 வயதில் பகைவர்களால் சூழப் பட்டிருந்தார் .அவரது அரியணை மயிரிழையில் சலாடிக்  கொண்டிந்தது .அப்பொழுது தன் நிலையை உணர்த்தார் .இனிமேல் மதுக் கோப்பையைத் தீண்டுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார் .எடுத்த உறுதியில் இறுதி வரை உறுதியாக இருந்தார் .    இப்படி மதுவிலக்கு பற்றிய தகவலும் உள்ளது .

ராக்பெல்லர் சொன்ன கருத்து ஒன்று .இதோ !
"உழைப்பை நிறுத்தி விட்டால் உடலும் மனமும் சீர் கேட்டு விடும் ."எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் இது .

காந்தியடிகள் பற்றி நிறைய  தகவல் உள்ளது .நேரு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் உள்ளது .மர்மக்கதை மன்னர் வாலஸ் தமது கற்பனை தடைபடாமல் இருக்க தேநீர் அருந்திக் கொண்டே இருப்பார் .

ஒரு சில தகவல்கள் தவிர மற்ற எல்லா தகவல்களும் புதியவை .புத்துணர்வு தருபவை .மகாகவி பாரதியார் ,அறிஞர் பெர்னாட்ஷா  ,ரூஷ்வெல்ட் உள்ளிட்ட பல மேதைகளின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உள்ளது .இந்த நூலை படித்து முடித்தவுடன் பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை  நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் மெர்வின்அவர்களுக்கு பாராட்டுக்கள் .சிறந்த நூலை சிறப்பாக பதிப்பித்த குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் 

--


--

கருத்துகள்