தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும் விளக்கமும் . தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர்  தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும்  விளக்கமும் .

தொகுப்பு   கவிஞர் இரா .இரவி 

விழா ஏற்பாடு திரு பி .வரதராசன் .புரட்சிக் கவிஞர் மன்றம். மதுரை


 " MIRRAR OF TAMIL AND SANSKRIT " என்ற நூலில் ஆர் .நாகசாமி நஞ்சை கக்கி உள்ளார் .

அவர் எழுதிய நூலுக்கு மறுப்பு எழுதி வருகிறேன் விரைவில் ஆங்கிலத்தில்  வெளிவரும். இணையங்களிலும் இடம் பெறும் .

உலகிற்கே உழவை கற்பித்த  தமிழருக்கு உழவு தெரியாது .வங்காள தேசத்தவர்தான் உழவு கற்றுக் கொடுத்தார்கள் என்று எழுதி உள்ளார்  .

திரு .வி .க . சொல்வார்கள்  "குப்பையை கிளறினால் தும்பும்  தூசியும் கிளம்பும் .கண்ணை கெடுத்து விடும்  ."அது போல அவர் எழுதி உள்ள நூல் முழுவதும் குப்பை .ஆர் .நாகசாமிக்கு தமிழ் புலமையும் இல்லை சமஸ்கிருத புலமை இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக இந்த நூல் உள்ளது .
அவ
ருக்கு  மறுப்பு எழுத  இந்தக்  குப்பையை படிக்கின்றேன் .

தொல்காப்பியம் இலக்கண நூல் எனபது உலகம் அறிந்த உண்மை .ஆனால் ஆர் .நாகசாமி தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்கிறார் .நடன சாஸ்திர நூல் என்கிறார் .சிலப்பதிகாரத்தை பொய்யாக புனைந்த நூல் என்கிறார் .அவரே எட்டாவது இயலில் சிலப்பதிகாரம் கற்பனை என்று சொல்லி விட்டு பத்தொன்பதாவது இயலில் வரலாற்றுச் சான்றை குறிப்பிட்டுள்ளார் .அவர் கருத்தில் அவரே முரண் பட்டு விட்டு .நூலில் சான்றுகளுடன் யாரும் மறுக்க தயாரா ? என்று தமிழர்களைப்  பார்த்து  சவால் விட்டுள்ளார் .

  தமிழ் மொழி ஒரு வட்டார மொழி சமஸ்கிருதத்தால் செம்மொழியானது என்று பச்சைப் பொய் எழுதி உள்ளார் ." தமிழ் மொழி பிற மொழிகளில் இருந்து மிக விரைவாக கடன் பெற்று ,பெற்ற கடனை தன்னுள் கரைத்து செம்மொழி தகுதி பெற்றது ".என்கிறார் .ஆர் .நாகசாமி சமஸ்கிருதமும் பரத முனிவரின் நடன சாஸ்திர நூல் மட்டுமே படித்துள்ளார் .வேறு இலக்கியங்கள் படிக்க வில்லை . தொல்காப்பியமும் சரியாக படிக்காமல் நுனிப் புள் மேய்ந்துள்ளார்.தொல்காப்பியத்தில்100 கொள்கைகள் உண்டு . அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார் .இவ்வளவு மோசமாக யாருமே எழுத மாட்டார்கள் .இப்படி எழுதி விட்டு முதன் முறையாக நானே எழுதி உள்ளேன் என்று மார் தட்டி உள்ளார் .முழு முட்டாள்தனமாக எழுதி விட்டு எல்லோரையும் முட்டாள் ஆக்கப் பார்க்கிறார். 

சேரன் செங்குட்டுவன் வரலாறு உலகம் அறிந்த உண்மை .கற்பனை என்கிறர் .தமிழ் இலக்கியத்தை தமிழ் பண்பாட்டை ஒழுக்கத்தை நெறியை கொச்சைப் படுத்தி உள்ளார் .எல்லாமே கற்பனை என்கிறார் .புனையப்பட்டது என்கிறார் .

இலங்கை  கஜ மன்னன் கண்ணகி வரலாறு அறிந்து விட்டு அவளுக்கு இலங்கையில் கோயில் கட்டினான் என்ற வரலாறு உள்ளது .

வட மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க
க் காரணம் நம் தமிழ் மொழி.இந்த உண்மையை மறைத்து தமிழுக்கு செம்மொழி தகுதிக்குக் காரணம் வட மொழி என்று கூசாமல் போய் எழுதி உள்ளார் .
    
உலகம் என்ற தமிழ் சொல்லைத்தான் கடன் பெற்று வட மொழியில் லோகம் என்றார்கள் .இந்தியில் லோக் என்று ஆனது .இப்படி பல சொற்களை உதாரணம் சொல்ல முடியும் .4 ஆம்  நூற்றாண்டு  காலத்தில் சமஸ்கிருதத்தில் அணி நலன்கள் இல்லை .7ஆம்  நூற்றாண்டில் தான் அணி நலன்கள் சமஸ்கிருதத்தில் வந்தது .

உவமா ,தீவகம், ரூபகம் இந்த அணி நலன்கள் .இவை சமஸ்கிருதத்தில் தமிழுக்கு வந்தது என்கிறார் .

உவமை என்ற தமிழ்ச் சொல்லை திருடி
சமஸ்கிருதத்தில் உவமா என்றனர் .
தீ என்பது தமிழ்
ச் சொல் அதைத் திருடி சமஸ்கிருதத்தில் தீவகம் என்றனர் .
ரூபம்
என்பது தமிழ்ச் சொல் அதைத் திருடி சமஸ்கிருதத்தில் ரூபகம் என்றனர் .

இயைபு  தான்
யமகம் என்று சொல்லாமல் ,யமகம் என்பது இயைபு ஆனது என்கிறார் .தமிழர்கள் இனியும் துங்காமல் விழித்து எழ வேண்டும் .உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை  இழிவு படுத்தி எழுதி உள்ள ஆர் .நாகசாமி போன்ற்வர்களுக்கு சான்றுகளுடன் தக்க பதில் தர வேண்டும் .பரப்புரை செய்ய வேண்டும் . --

கருத்துகள்

 1. s.subramanian It was said that R.Nagasamy's role during his tenure as D irector of Archeology had been under criticism on many segments. His next level Officer who was my friend told me that he used his name in books which were written By others.It was said also under Desciplinary action in connection with World Tamil Conference.

  பதிலளிநீக்கு
 2. ஆர் .நாகசாமிக்கு பதில் சொல்லும் விதமாக அனைவரும் தொடர்வோம் .

  மதுரையில் கோவலனை சிரச் சேதம் செய்த இடம் இன்றும் உள்ளது அந்த இடத்தின் பெயர் இன்றும் கோவலன் பொட்டல் ஆகும் . ஆர் .நாகசாமி தொல்லியல் துறையின் இயக்குனர் பொறுப்பில் இருந்தபோது அந்த இடத்திற்கு சென்று உள்ளார் .அவர்க்கு கோவலன் பொட்டல் ஆய்வு தகவல்கள் தெரியும் .இன்றும் அந்த இடம் தொல்லியல்துறையின் கட்டுபாட்டில் உள்ளது . தமிழ்நாடு கேரளா எல்லையில் கண்ணகி கோயில் உள்ளது சிலப்பதிகாரம் நடந்த வரலாறு என்பதற்கு இது போன்ற பல சான்றுகள் உண்டு . இதை எல்லாம் மறந்து விட்டு ,மறைத்து விட்டு ஆர் .நாகசாமி சிலப்பதிகாரம் கற்பனையாக புனையப்பட்ட நடன சாஸ்திர நூல் என்று அவர் நூலில் எழுதி உள்ளார் .

  பதிலளிநீக்கு
 3. kurinjivendan தமிழ் போன்ற தொன்மையான மொழி இப்படி பலவாறு விமர்சிக்கப் படுவது இயல்பு தான். காய்த்த மரம் தானே கல்லடி படும். திரு.நகசமியைப் புறவுலகிற்கு அடையாளம் காட்டியதே, தமிழ் தான். தொல்லியல் அறிஞர் என்ற பட்டத்தை அளித்த தாயான தமிழைக் கொண்டு போய் சமஸ்கிருத முதியோர் இல்லத்தில் நாகசாமி கட்டிவிடத் துடிப்பதற்கு அரைக்குறை ஞானமே காரணம். முதலாவதாக, ஆதிப்பழங்குடி முதல் சங்கத்தமிழன் வரை ஒவ்வொரு அடியாக முயற்சித்து வளர்த்த தமிழை, செயற்கையாக உருவாக்கிய சமஸ்கிருதத்தோடு ஒப்பிடுவதே தவறு. இதில் கொடுமையின் கொடுமுடியாக உழவுத்தொழிலை வங்காளத்தவர்களே தமிழருக்குக் கற்றுத் தந்தனர் என்று கூற உண்மையிலேயே வேறேதோ பின்னணி இருக்க வேண்டும். காலங்காலமாகத் தமிழ் எத்தனையோ பகைமைகளையும், துரோகங்களையும் சந்தித்து வந்துள்ளது. அதில் இதுவும் ஒன்று என்பதை அன்றி வேறென்ன சொல்ல? குறிஞ்சிவேந்தன்

  பதிலளிநீக்கு
 4. s.subramanian All listioners may kindly note that Thiru.Nagasamy is not the expert in literature or Well versed in Tamil development.So don't make him the great in other words we should not waste our time and energy.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக