வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் ! கவிஞர் இரா .இரவி

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !
கவிஞர் இரா .இரவி

உயிர் காப்பான் தோழன் உண்மை
உயிர் கொடுத்தும் காப்பான் நண்பன்


அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்
அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்

சொந்த பந்தம் பணம் பார்த்து பழகும்
சொந்த நண்பன் மனம் பார்த்து பழகுவான்

நமக்கு ஒரு சோகம் என்றால் உடன்
நம்மைத் தேடி வரும் ஆறுதல் நண்பன்

நமக்கு ஒரு கவலை என்றால்
நம் கவலையைத் தீர்ப்பவன் நண்பன்

நம் கண்ணில் கண்ணீர் வழிந்தால்
நமக்காக துடைக்க கரம் நீடுபவன் நண்பன்

நம் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வான்
நம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பான் நண்பன்

போட்டி வந்தால் விட்டுக் கொடுப்பான்
போட்டியில் இருந்து விலகிடுவான் நண்பன்

தியாகம் செய்த நண்பன் உண்டு
துரோகம் செய்தவன் நண்பனே அல்ல துரோகி

சாதனைக்குத் துணை நிற்பான் நண்பன்
சோதனையை தூர விரட்டுவான் நண்பன்

பணத்தைப் பெரிதாக நினைக்காதவன்
பண்பில் சிறந்த பாசக்கார நண்பன்

நண்பனை யாரும் இகழ்ந்தால் துடிப்பான்
நண்பனின் பெருமையைப் பேசும் நண்பன்

நாம் செய்த சிறு உதவி மறக்க மாட்டான்
நமக்கு அவன் செய்த பேருதவி மறந்திடுவான் நண்பன்

மறக்க முடியாதவன் நண்பன்
மறக்கக் கூடாதவன் நண்பன்

வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல நினைவு
வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன்
--

கருத்துகள்