அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

அழகு எல்லாம் அழகு அன்று
அழகற்றது எல்லாம் அழகற்றது அன்று !

அழகு அழகற்றது என்பது எல்லாம்
அனைவரும் கற்பித்த கற்பிதங்களே !

அழகை ஆராய்ந்து நோக்கினால் 
அழகில் உள்ள குறை தெரியும் !

அழகற்றதை ஆராய்ந்து நோக்கினால் 
அழகற்றதில் உள்ள அழகு தெரியும் !

வெள்ளைதான் அழகு என்று அன்றே
வெள்ளை அறிக்கை வாசித்ததின் விளைவு !

கருப்பு  அழகற்றது என்று அன்றே
கருப்பசாமியும் சொன்னதன் விளைவு !

அவனுக்கு அழகானது எனக்கு அழகற்றது
எனக்கு அழகானது அவனக்கு அழகற்றது !
அழகினால் ஆபத்தும் உண்டு
அழகற்றதால் ஆபத்து இல்லை !

கிடைக்காத அழகிற்கு ஏங்காதே
கிடைத்ததில் அழகை காண் ! 


அழகு ஆளுக்கு ஆள் வேறுபடும்
அழகு என்றும் நிரந்தரம் அன்று !

அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது குணத்தில் உள்ளது 
 

கருத்துகள்

 1. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக