மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மதுபானக் கடை

இயக்கம் திரு .கமலக்கண்ணன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கமான திரைப்பட மசாலா இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக பாடமாக்கி உள்ளார்
.திரு. கமலக்கண்ணன்.இவரை மற்றொரு பாலாஜி சக்திவேல் என்றே சொல்லலாம் .படத்தில் கோடிகள் தியம் பெறும்  நடிகர்கள் இல்லை .கோடிகள் தியம் பெறும் நடிகைகள் இல்லை .புகழ்ப்பெற்ற நகைச் சுவை நடிகர்  இல்லை.வெளி நாடு செல்ல வில்லை .டுயட் பாடல் இல்லை . எந்த பிரமாண்டமும்  இன்றி பிரமாதமாக இயக்கி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் .சமீபத்தில் வந்த எல்லா திரைப்படங்களிலும்   மதுபானக்  கடையில் மது அருந்தும் காட்சி கட்டாயம் இருக்கும் .ஆனால் இந்தப் படமோ மொத்தப் படமும்,   மதுபானக்   கடையிலேயே நடக்கின்றது .படம் தொடங்கும் போதே "இந்தத் திரைப்படத்தில்  கதை என்று இருப்பதாக நீங்கள்  கருதினால்,அது உங்களுடைய கற்பனை "வித்தியாசமாக உள்ளது .அதேபோல் படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை .ஆனால்    
மதுபானக்   கடையில் குடிமகன்கள் நடத்தும் கூத்து  படம் முழுவதும் காட்டி உள்ளார் .

படத்தின் பெயரைப் பார்த்து விட்டு
குடிக்கு எதிராக கவிதை ,கட்டுரை எழுதி வரும் நாம் இந்தப் படத்திற்குபோக வேண்டுமா ? முதலில்  என்று யோசித்தேன் .பின்  என்ன சொல்கிறார் என்று போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் .
ஆனால் படத்தில் குடியின் பாதிப்பை மிக ஆழமாக சொல்லாவிட்டாலும் , மதுபானக்   கடையில் நடக்கும் திருவிளையாடல்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் .மதுபானக்  கடை திறக்கும் முன் காத்திருக்கும் குடிமகன்கள் ,திறக்க தாமதமானதால் கடிந்துகொள்ளும் குடிமகன்கள்.கடை அடைக்கும்  நேரத்தில் மது கேட்கும் குடிமகன்கள்,கடை அடைத்தபின் கூடுதல்  விலைக்கு விற்றல்.போலியான சரக்குகளை விற்கும் அவலம் .
 
மதுக்கடையில் அமர்ந்து மது குடிப்பவர்களுக்கு விற்கும் உணவு  சமைப்பவர் காய்கறி அழுகிப் போய் உள்ளது என்று சொல்ல ,"குடிகார நாய்களுக்குதானே சும்மா போடு "என்று சொல்கின்றார் முதலாளி .பள்ளி ஆசிரியரே மது குடிக்க வரும் அவலம் .தங்கள் ஆசிரியர் வந்து இருப்பதைப் பார்த்து பதுங்கி வந்து சீருடையை  கழற்றிவிட்டு சென்று  மாணவர்கள் பீர் வாங்கிகுடிக்கும் அவலம் .  கல்லூரி  மாணவர்கள் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மதுக்கடையில் மது அருந்தி கொண்டாடும் அவலம் .தன் நிலத்தில் மதுக் கடை நடப்பதை பார்த்து பைத்தியமான ஒருவர் . மதுக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே முதலாளியின் மகளை காதலிக்கும் ஒருவன் .இது வேண்டாம் ஆபத்து என்று தடுக்கும் சக தொழிலாளி .ஒரு குடிமகன் குடிக்க வந்தால் குடித்து முடித்து விட்டு வெளியே செல்லாமல் வசனம் பேசும் அவரைக் ண்டு நடுங்கும் மதுக்கடைபணியாளர்கள் .பெரிய குடிகாரனையே பயமுறுத்தும் மற்றொரு குடிமகன் .காதலில் தோல்வியுற்று முதன்முறையாக பீர் குடித்து விட்டு சொல்லும் கவிதை நன்று .வசனம் எழுதியவருக்கு பாராட்டு .

என்னை இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து விடுவேன் .ஆனால்
மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன் ! 


குடிமகன் சொல்லும் வசனம் "நாம தள்ளாடினால்தான் கவர்மென்ட்  ஸ்டேடியா  இருக்கும் .நாம் ஸ்டேடியாயிட்டா  கவர்மென்ட் தள்ளாடிரும் "
அரசாங்கம்  வருமானம் ஈட்ட ஆயிரம் வழிகள் உண்டு   .மதுபானக் கடை வருமானம் அவமானம்.என்பது என் கருத்து. 
"ஆலயமணி  அடித்தால் சத்தம் ஆல்க்ககால் மணி அடித்தால் யுத்தம் "    
நாட்டுநடப்பை குடியால் குடி அழியும் உண்மையை அப்பட்டமாக படமாக்கி உள்ளார்.படம் அல்ல பாடம் வழக்கமாக சொல்வார்கள் இந்தப் படத்திற்கு பொருந்தும் .இந்தப் படம் பார்த்து விட்டு குடி மகன்கள் திருந்தினால்    அது இயக்குனரின் வெற்றி .மறந்து வந்த நமக்கு மதுபானக் கடை யை நினைவு படுத்தி விட்டாரே என்று குடிக்க செல்லும் குடிமகன்களை திருத்த வேண்டும் என்றால் மதுபானக் கடைகளை  மூட வேண்டும் .
துப்புரவுத் தொழிலாளி 
மதுபானக் கடையில் தண்ணீர் கேட்டதற்கு அவரிடம் தீண்டாமை பேசும் குடிமகனைப் பார்த்து கோபப் பட்டு அவர் பேசும் வசனம் கைதட்டல் பெறுகின்றது .எதோ எதுக்கோ இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பிய்  மூத்திரம் அள்ள ஏன்டா? கண்டு பிடிக்க வில்லை .நாங்களும் உங்களை மாதிரி மனுஷன் தானே. கஷ்டப் படுகிறோம் . இது வரை மனிதநேயம் .மிக நெகிழ்வான வசனம். பாராட்டுக்கள் .
துப்புரவுத் தொழிலாளி கெட்ட வாடை பொறுக்க  முடியாமல் குடிக்கிறார்கள் என்று நியாயப்படு
த்துவதுப்  போல உள்ளது .குடி யார் ? குடித்தாலும் தவறுதான்.குடி குடியை கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. குடி நாட்டுக்கும்   வீட்டுக்கும்  உயிருக்கும் கேடு என்பதை அனைவரும் உணர வேண்டும் .எழுத்தில் படிப்பதோடு நின்று விடாமல் குடிக்காமல் இருந்து  கடைபிடிக்க வேண்டும் .ஒரு ஆய்வில் சொன்ன தகவல் 80 %குற்றங்கள் மது போதையால்தான்  நடக்கின்றது .ஒரு காவலர் சொன்ன தகவல் சனி ஞாயிறு வந்து விட்டாலே குடி தொடர்பான சண்டைகளே  அதிகம் .

தொழிலாளிகள் பற்றிய பாடல் மிக நன்று .இந்தப் பாடலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர்,எழுத்தாளர்  பொன்னீலன் பாராட்டி இருந்தார் .

மதுபானக் கடை இன்று திருவிழாக் கடை போல கூட்டம் கூடுகின்றது  .ஆசிரியர் ,மாணவன் ,அப்பா, மகன் ஒரே கடையில் குடிக்கும் அவலம் நடக்கின்றது.குசராத்து போல தமிழகத்திலும் முழுமையான மது விலக்கு மட்டுமே ,நம் குடிமகன்களை திருத்த முடியும் .வெட்டுக் குத்து 
குத்துப்பாட்டு ,கவர்ச்சி நடனம் ,துப்பாக்கி சூடு,வன்முறை ,ஆபாசம் இன்றி துணிவுடன் படம் இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இவரைப்  பார்த்து மசாலாப்பட இயக்குனர்கள் திருந்த வேண்டும் .சமுதாயத்திற்கு பயனுள்ள கருத்து சொல்ல முன் வர வேண்டும் .




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்