நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி

கோடிப் பணத்தை விட
உயர்ந்தவர்கள்
நண்பர்கள் !  

சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !  

துன்பம் என்றால்
திரண்டு விடுவார்கள்
நண்பர்கள் !  

துயரத்தின் போது
தோள் கொடுப்பவர்கள்
நண்பர்கள் !  

எதுவும் செய்வார்கள்
எதையும் இழப்பார்கள்
நண்பர்கள் !  

குடத்து விளக்கான நம்மை
குன்றத்தில் வைப்பார்கள்
நண்பர்கள் !

கூட்டமாகக் கூடி
கூத்துக் கட்டுவார்கள்
நண்பர்கள் !

நேரம் செல்வதை
மறக்கடிப்பவர்கள்
நண்பர்கள் !

புண்பட்ட மனதிற்கு
மருந்தாவர்கள்
நண்பர்கள் !

வாழ்வின் இருள் நீங்க
வழிகாட்டி ஒளி தருவார்கள்
நண்பர்கள் !

தவறான பாதை சென்றால்
தட்டிக் கேட்பவர்கள்
நண்பர்கள் !

எதிரிகளை அடக்குவார்கள்
பகைவர்களை பயப்படுத்துவார்கள்

நண்பர்கள் !

ஏணியாக இருப்பார்கள்
தோணியாக  வருவார்கள்
நண்பர்கள் !

காதலுக்கு துணை நிற்பார்கள்
காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
நண்பர்கள் !

உயிருக்கு உயிரானவர்கள்
என்றும்  மறக்கமுடியாதவர்கள்
நண்பர்கள் !
 
--

கருத்துகள்