வயசு 18. திரைப்படம் விமர்சனம்

வயசு 18

இயக்கம்
திரு . R.பன்னீர் செல்வம்

திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மன நோயாளி கதை .ரேனுகுண்டா என்ற திரைபடத்தை இயக்கிய திரு . R.பன்னீர் செல்வம் அவர்களின் அடுத்த படைப்பு .பிறக்கும் போதே மன நோயாளியாக பிறப்பது மிகச் சிலர் .ஆனால் மன நோயாளியாக சமுதாயத்தால் ஆக்கப்படுவது பலர் .மன நோயுக்கு  மருந்து அன்புதான் .வன்முறை அல்ல என்று போதிக்கும் படம் .

மகன் மீது பாசம் பொழியும் நல்ல தந்தை .குட்டிக் கதைகள் ,நிலவு,நட்சத்திரம் , காடு என்று சொல்லி வளர்க்கும் சிறந்த தந்தை .வீட்டில் எபோதும் சண்டையிடும் அம்மா .மிகவும் பொறுமையான தந்தை .கல்லூரி நண்பனிடம்  தொடர்பு உள்ள அம்மாவின் நிலை கண்டு அதிர்ந்த அப்பா தூக்குப் போட்டு தற்கொலை  செய்து கொள்கிறார்  .மனம் பாதித்த சிறுவன் மன நோயாளி ஆகின்றான் .அவனிடம் அம்மா அன்பு காட்டாமல் அடித்து, சூடு வைத்து துன்புறு
த்துகின்றார்.   

கல்லூரி நண்பர் திருமணம் செய்யாமலே அம்மாவுடன் வந்து ஒரே  வீட்டில் தங்குகிறார் .மன நோய் முற்றுகின்றது .நாய் குரைப்பதை பார்த்து மன நோயாளி நாயை பார்த்து நாயைப் போலவே குரைத்து சண்டை போடவும் நாய் பயந்து ஓடி விடுகின்றது .நண்பன் மருத்துவனைக்கு அழைத்து செல்கிறான் .அங்குள்ள் மருத்துவர் ரோகினி மனித நேயத்துடன் செயல் படுகின்றார் .மருத்துவர் ரோகினி பாத்திரம் மிகச் சிறந்த பாத்திரம் .மனதில் நிற்கும் பாத்திரம்.மன நோயாளி பெயர் கார்த்திக்.அவன்  நண்பனிடம் கார்த்திக் அம்மாவை வந்து என்னை பார்க்க சொல்லுங்கள் என்று பெயர் முகவரி அட்டை கொடுத்து அனுப்புகின்றார் .அம்மாவோ கொடுத்த அட்டையை குப்பையில் வீசுகிறார் .மருத்துவர் ரோகினி வீட்டிற்கு அம்மாவை நேரில் பார்த்து மகனின் மன நோயின் தன்மை குறித்து எச்சரிக்க வந்த போதும் அவற்றை காது கொடுத்து கேட்காமல் மருத்துவரை அவமதித்து அனுப்புகின்றார் . நோய்  முற்றுகின்றது .பாம்பை பார்த்து பாம்பு போல மாறி உஷ் உஷ் என்கிறார் .கடிக்கிறார் .காளையை பார்த்து காளை போல முட்டி தள்ளுகிறார் .வண்டை பார்த்து வண்டு போல புரள்கின்றார் .மன நோயாளியாக வரும்   கதாநாயகன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது கிடைப்பது உறுதி என்று அறுதி இட்டுச்  சொல்லலாம் .

மன நோயாளி என்பது தெரியாமலே வெளி ஊரில் இருந்து புதிதாக வந்த பெண் அன்பு செலுத்துகின்றார் .பத்து மணிக்கு இங்கு வா என்று அவள் சொன்னதும் அந்த இடத்திலேயே மறு நாள் பத்து மணி வரை காத்து இருக்கிறார் .பேருந்தில் அவளிடம் சிலுமிசம் செய்த ஆசாமியை துரத்தி சென்று அடிக்கிறார் .ஒரு தலையாகவே அவளை மனதிற்குள் காதல் செய்கிறார்..
மன நோயாளியின் நண்பனாக வரும் மன நோயாளி நண்பன் பாத்திரம் மிக நன்று .காதல் தோல்வி  அடைந்த மன நோயாளி அவர் அடிக்கடி காதல் வாழ்க ! என்று சொல்லிக் கொண்டே ,மன நோயாளி நண்பனின் காதலுக்கு உதவுகின்றார் .காதலியை கடத்து உதவுகிறார். மன நோயாளிகள் கார் ஓட்ட அனுமதி  இல்லை .உரிமம் வழங்குவது இல்லை .அவர் படம் முழுவதும் பலகாட்சிகளில் கார் ஓட்டுவது காவலர்கள் காரை மிஞ்சி ஓட்டுவது ,காவலர் கார்களை விபத்துக்கு உள்ளாக்குவது நம்பும் படியாக இல்லை . காட்டுக்கு அழைத்து செல்கிறார் .பல உதவிகள் செய்து மனதில் நிற்கிறார் .அவர் பேசும் வசனங்கள் மிக நுட்பம் .

மன நோயாளி பாத்திரத்தை சில விலங்குகளுக்கு இணையாக காட்டி இருபது மிகையாக உள்ளது . மன நோய் முற்றி  ம்மாவை கொலை செய்து விடுகிறார் .அம்மாவின் கல்லூரி நண்பனை தாக்குகின்றார் .பிறகு கொன்று விடுகின்றார் . காவல் ஆய்வாளர் பிடிக்க செல்கிறார் அவரையும் காவலர்  முன்னிலையில் கல்லை தூக்கி போட   முனையும் பொது காலை பிடித்து கெஞ்சவும் விட்டு விடுகிறார்.  இந்தக் காட்சியை பார்த்த காவலர் சக காவலர்களிடம் காவல் ஆய்வாளர் கெஞ்சியதை நடித்து காட்டுகிறார் .மற்றொரு முறையும் இது போன்று நடக்கின்றது ,நல்ல நகைச் சுவை காட்சிகள் .திரை அரங்கில் கை தட்டுகின்றனர் .காவல் ஆய்வாளரும் நன்றாக நடித்து உள்ளார் . 

மருத்துவர் ரோகினி பேசும் வசனங்கள் மிக நன்று .வயது மகன் வீட்டில் இருக்கும் பொது பெற்றோர் மிக ஒழுக்கமாக வாழ வேண்டும் ஒழுக்கம் தவறினால், குழந்தைகளின் வாழ்க்கை பாழாகும்  .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டின் படி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .என்ற நல்ல செய்தி சொல்லும் படம் .மன நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள் என்று மனித நேயம் உணர்த்தும் படம் .இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .படம் பார்க்கும் பொது நிஜ நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை தந்தது .இயக்குனரின் வெற்றி .பாடல்கள் யாவும் நன்று. கவிஞர்கள் நா .முத்துக்குமார் ,யுகபாரதி எழுதி உள்ளனர்  .திருநங்கைகள் பாடும் பாடலான ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பாடல்
திருநங்கைகளின் மன வலியை உணர்த்துகின்றது .வரலாற்று சிறப்பு மிக்க மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் எடுக்கப் பட்ட பாடலும் ,பாடல் படபிடிப்பும் மிக நன்று .கதா நாயகியும் நன்றாக நடித்து உள்ளார். மொத்தத்தில் மனித நேயமும் ,ஒழுக்கமும் கற்பிக்கும் படம் இது .பாராட்டுக்கள் .


--

கருத்துகள்