சின்னச் சின்னப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

சின்னச் சின்னப் பூக்கள்

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர்
.625106

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடைப்பெற்ற  பல்வேறு கவியரங்களில்  கலந்துக் கொண்டு வாசித்த
கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன்  அணிந்துரைக்  கவிதை அற்புதம் . நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ.  பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த   முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் . 


மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில்
காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .
நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில்   "அரச மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று  குறிப்பிட்டதை   
அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே  அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான  நூல்தான் .பாராட்டுக்கள் .

மனம்
நிறை
மனம்  குறை காணாது
குறை
மனம் நிறையாக
ஈர
மன மென்றும் காயாது
வீர
மன மிங்கு சாயாது .

நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .


சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .
 
கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான்   என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .


இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத்  
திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்

உலகப்  பொது  மறையான   ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்.
காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல் ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக காதலைப் பாடி உள்ளார் .

காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை  
அகம் ,புறம் சொல்லும்
சங்கத் தமிழன்றோ 
எங்களுக் கெல்லாம் காதல் .

இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும் இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் . அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள்  சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .

மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழு
ங்குவதோ  விலைவாசி .

சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின் பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல  கருத்துக்களை மிக எளிமையாக கவியாக்கி உள்ளார் .
எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .

குடும்ப மொருத் தேன்
கூடு அதிகம் பெற்றால்
அதுவு  மோருப் பேன் 
கூடு .

தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .
கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து   வடித்துள்ளார் .


மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .

வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .

கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக  வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .

உலகே சிரிக்கும்    நம் அரசியல்வாதிகளின்  ழல் பற்றிய கவிதை ஒன்று.
லெனும் தேரு
ரெல்லாம்  உருகுதாம் பாரு
ழலை நாம் ஒழிப்போமா
லால் நாமே ஒழிவோமா !
   

இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் . .கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்கள் உருவத்தால் மெலிந்து இருந்தாலும் அவருடைய கவிதையின் கருத்துக்கள் வலிமை மிக்கதாக உள்ளது .நூல் வெளியீட்டு விழாவில் ஒரு நிமிடம் என் தந்தை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி விஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மகள் பேசினார்கள் ."இந்த விழாவில் இவ்வளவு பேர் பாராட்டிய இன்றுதான் என் தந்தைக்கு கவிதை ஆற்றல் இருப்பதாய் உணர்ந்தேன்பெருமையாகவும் மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது . " .என்றார்கள் .இப்படித்தான் பல படைப்பாளிகளை   ஆரம்பத்தில் குடும்பத்தினர் கண்டு கொள்வதில்லை. விழா முடிந்து பேசிய அவர் மகள் ஒரு ஆசிரியர். நான் அவரிடம் சொன்னேன் ."அய்யாவிடம் கவித் திறமை நிறைய உள்ளது. தொடர்ந்து நூல்கள் எழுதிடஅவருக்கு  ஊக்கம் கொடுங்கள் "அவர்களும் சரி என்றார்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள்

--

கருத்துகள்