ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி

முட்டாள்களின்
மூடச்செயல்
தற்கொலை !

தன்னம்பிக்கையற்றவர்களின்
தரமற்ற செயல்
தற்கொலை !

தாழ்வு மனப்பான்மையின்
வெளிப்பாடு
தற்கொலை !

கோழைகளின்
கோழைத்தனம்
தற்கொலை !

பகுத்தறிவு மனிதனுக்கு
அழகற்ற செயல்
தற்கொலை !

அவலம் கேவலம்
செயற்கை மரணம்
தற்கொலை !

தீர்வு அல்ல
தீராத அவச்சொல்
தற்கொலை !

மனச்சிதைவால்
உயிர்ச்சிதைவு
தற்கொலை !

முடிவு அல்ல தொடக்கம்
உறவுகளின் துக்கம்
தற்கொலை !

முடிவல்ல ஆரம்பம்
பெற்றோரின் துன்பம்
தற்கொலை !

மடத்தனத்தின் உச்சம்
உயிர் போவதே மிச்சம்
தற்கொலை !

வாழ்க்கை ஒருமுறைதான்
வீணடிப்பது முறையோ ?
தற்கொலை !

உங்களின் செயலால்
உறவுகளுக்கு இன்னல்
தற்கொலை !

தலைமுறைக்கே அவமானம்
காற்றில் பறக்கும் மானம்
தற்கொலை !

ஒரே பிறப்பு உண்மை
மறு பிறப்பு பொய்
தற்கொலை ?

கோடிகள் கொடுத்தாலும்
மீட்க முடியாது உயிர்
தற்கொலை ?

உன்னால் உருவானதல்ல உன்னுயிர்
உனக்கேது உரிமை
தற்கொலை ?

சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்
உயிர் மாய்க்கும் குறையற்றவர்கள்
தற்கொலை ?

ஒழியட்டும் ஒழியட்டும்
உலகை விட்டு
ஒழியட்டும்
தற்கொலை !

முற்றுப்புள்ளி வைத்திடுவோம்
முடிவு கட்டுவோம்
தற்கொலைக்கு !

வாழட்டும் வாழட்டும் உயிர்கள்
இயற்கையாக வரட்டும்
மரணம்
வேண்டாம்
வேண்டாம் தற்கொலை .


 

கருத்துகள்