சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

சுட்டும்  விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் 
கவிஞர் கவிவாணன்
மாவட்ட துணை செயலர்                                            
த.மு .எ .க .ச
13.2.2.பள்ளிவாசல் தெரு
வத்தலக்குண்டு 624202
செல்  9965039935


பிணம் தின்னும் சாத்திரங்களின் பிடறியில் ஏறி மிதிக்கும் சுடராக இருந்தவர் .இடர்பாடுகள் இருந்தும், படரும் நிலையில் சிந்தனை பிரசவித்த அக்கினி கணை .மூத்திப்பை தூக்கிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு யுக ஆத்திரம் கொண்டவர் தந்தை பெரியார். வரை இரா. இரவி எப்படி ? பார்க்கிறார்.

மூடநம்பிக்கை
முற்றுப் புள்ளியாக்கியது
ஈரோட்டு மை !

 
நல்ல கவித்துவ  சொல்லாட்சி

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

என்கின்ற
போது மூட நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் இவர் கவிதைகள் சாட்டை எடுக்கின்றன .
ஹைக்கூ கவிதையில் சொல் சிக்கனம் ,காட்சிகளின் உள்ளடக்கம் ,கவித்துவ நாணயம் வேண்டும் .அது இவர் கவிதைகளில் ஏராளம் .

கூழ்  இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !


நம்மை ஏமாற்றும் அரசியல் எந்தக் கழுதையிலாவது ஏறி வரும் .ஒன்று சாதிக் கழுதை ,இரண்டு மதக் கழுதை.இரண்டும் முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால்  உதைக்கும் .கடிக்கும் பல்லை உடைக்கும் முற்போக்கானவர்களின் கவிதை ! கவிதை என்பது வெறும் சொல்லாட்சியல்ல .

கேரளா மகாகவி குஞ்
ஞிண்ணி சொல்வது போல்

"எழுவது எழுத்து "

எழும் எழுத்தை நாம் படைப்போம் .அந்த வரிசையில்11 கவிதை நூல்களின் மூலம் இரா .இரவி தந்து கவிதை பயண நீட்சியை பறைசாற்றுகிறார்.
சமூக அக்ககறை என்பது முற்போக்காளனுக்கு மிகவும் அதிகம் என்பதை  தொடர்ந்து வலியுறித்தி வரும்  பல முற்போக்கு கவிஞர்களில் இரா .இரவியும் முக்கியத்துவம் பெற்றவர் .ஆதலால்தான் .

விதைத்த நிலம்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் !

திரும்புகின்றது
கற்காலம்
மின் தடை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை ! 


என பல கவிதைகள் சமூக அககறையோடு அதிர வைக்கிறது .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க ..
முதியோர் இல்லத்தில் பாட்டி !

குடும்ப உறவுகள் சிதைந்து போன நுகர்வு கலா
ச்சாரத்தில்,  இன்னும் பாட்டியின் ஏக்கம் ஒவ்வொரு பேரப் பிள்ளைகளுக்கும் இருக்கும்  என்பதை உணர்த்துகிறது .

பொம்மை உடைந்த போது
உடைந்தது மனசு
குழந்தை !

மெல்லிய உணர்வுகளை
தன் ஹைக்கூ கவிதைகளில் சேமித்து வைக்கிறார் இரா .இரவி .

மனத்தில் ம
ச்சமென
நீங்காத நினைவு
காதல் !

மிகவும் ரசிக்க தக்க கவிதை .மச்சம் மறையாது  உடலோடு இருக்கும் .அது காதலாக பரிமளித்து நம்மை சிலாகிக்க வைக்கிறது .

உருகிடும் மெழுகு
உறைந்திடும்  அழகு 
அம்மா !

அம்மாவிற்கு நிகர் எதை வேண்டுமானாலும் உவமை சொல்லலாம் .வானம் ,மலை என்றாலும் அம்மாவின் தியாகத்திற்கு முன் குறைவுதான். அம்மா என்றால் ஆளும் அம்மா அல்ல .நம்மை ஆளும் அம்மா நம்மம்மா !
ஹைக்கூ கவிதைகளில் பல மின்னல்களை உள்ளடக்கியது இரா .இரவியின் "சுட்டும் விழி" நூல் .
ஆனாலும் இன்னும் சுண்ட காய்ச்சிய சொல் வேண்டும் என்பது  என்  அவா .

நூலை வாங்கி வாசியுங்கள்
நூதனமான  ஹைக்கூ வை நேசியுங்கள்
வாழ்த்துக்கள் !




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!

கருத்துகள்