ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                  கவிஞர் இரா .இரவி  

உணர்த்திச் சென்றன
அலைகள்
கடலின் வனப்பை !


சந்தேகப்படுங்கள்
நம்பாதீர்கள்
"சாமி நான்" என்பானை !

மூடி மறைக்க முடியவில்லை
கோடிகளால்
சாமியார் லீலைகள் !


வளர்வது தெரியாது
வளரும்
காதல்
மரம் !

சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது
காதல் !


கூட்டம் கூடியது
முக்கியப்புள்ளி நாய் இறந்தது
முக்கியப்புள்ளி இறந்தார் ?

உள்ளம் மலர்ந்தது 
நட்ட செடியில்
பூத்தது பூ !

மலர்ந்த மலர்
மழலையின் சிரிப்பு
மனதிற்கு மகிழ்வு !

அன்பை அழித்து
வம்பை வளர்கின்றது
தொலைக்காட்சித் தொடர்கள் !

அமோகமாக நடக்கின்றது
குறுந்தகவல்
கூட்டுக் கொள்ளை 
தொலைக்காட்சிகள் !


தமிழ்த்திரைப்பட விளம்பரத்தில்
ஆங்கிலத்தில் பெயர்கள்
வெள்ளையன்  வாரிசுகள் !

மீன் சாப்பிட்டது
அழுக்கை
சுத்தமானது குளம் !
 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்