இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி

இருபதாம் நூற்றாண்டுத்  தொல்காப்பியர் இலக்குவனார் !

 கவிஞர் இரா .இரவி

வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை
வாய்மை மேடு  ஊரில் பிறந்த தமிழ் வாய்மை

சிங்காரவேலரின் ம்கனாகப்  பிறந்த தமிழ்ச்சிங்காரம்
இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம்

திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர்
திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர்

அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர்
அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர்

உயர்நிலைப்  பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி
உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர்

கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர்
கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர்

தமிழுக்காகச்  சிறை சென்ற மாவீரர்
தமிழுக்காகவே  வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்

தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர்
தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர்

தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர்
தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர்

ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று
அழகு தமிழின் புகழை அகிலம் பரப்பியவர்

பாவாணர் பாராட்டிய பண்பாளர் இலக்குவனார்
பார் புகழும் தமிழுக்குப்  புகழ் பல சேர்த்தவர்

இலக்குவனாரைப்  பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
இலக்குவனாரைப்  பாராட்டாதவர்   தமிழ் அறிஞரே இல்லை
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்

  1. சிறப்பான கவிதை.இன்றைய இளைஞர் தலைமுறைக்கு அன்றைய தமிழ்ப்போராளியை அடையாளம் காட்டும் அரும்பணி ஆற்றிய்டுள்ளீர்கள்.பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கவிதை.அருமையான தமிழ் உள்ளம்.வாழ்க நீவிர்.வெல்க நும் கவிதைப்ப

    பதிலளிநீக்கு
  3. நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    பதிலளிநீக்கு
  4. நாளும் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் இரா.இரவிக்குப் பாராட்டுகள். தமிழுக்காக ச் சிறை சென்ற மாவீரர், இலக்குவனாரைப் பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
    இலக்குவனாரைப் பாராட்டாதவர் தமிழ் அறிஞரே இல்லை என்ற திருத்தங்களை மேற் கொள்க! உங்கள் படைப்புப் பயணம் புகழுடன் தொடரட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக