( உதகை மலர்க்கண்காட்சி ! )


( உதகை மலர்க்கண்காட்சி ! )

மலர்க்கண்காட்சி !    
கவிஞர் இரா .இரவி

மலர்ந்த மலர்கள்
மலர்வித்தன மனங்களை
மலர்க்கண்காட்சி !

பேசாத மலர்கள்
பேசின நம்மோடு
மலர்க்கண்காட்சி !

மலர்களின் மாட்சி
பார்த்தவர்கள் சாட்சி
மலர்க்கண்காட்சி !

மலைகளின் ராணிக்கு
மலர்களின் மகுடம்
மலர்க்கண்காட்சி !

வளமான வனப்பு
வந்தப்பின்னும் நினைப்பு
மலர்க்கண்காட்சி !

ரசித்துப் பார்த்ததில்
புசிக்க மறந்தனர்
மலர்க்கண்காட்சி !

யாராலும்
கூற இயலாது
மிகச் சிறந்த மலர் எது ?
மலர்க்கண்காட்சி !

பார்த்த இடமெல்லாம் ராஜா
மலர்களின் ராஜா ரோஜா
மலர்க்கண்காட்சி !

பூக்களை ரசிக்கும்
பூவையரும் அழகு
மலர்க்கண்காட்சி !

கண்கொள்ளாக் காட்சி
வண்ணங்களின் ஆட்சி
மலர்க்கண்காட்சி !

கண்டு ரசிக்க
கண்கள் போதவில்லை
மலர்க்கண்காட்சி !

மனதிற்கு மகிழ்ச்சி
உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி
மலர்க்கண்காட்சி !

மலருக்கு காயமின்றி
தேன் எடுத்த வண்டு
மலர்க்கண்காட்சி !
மரங்களின் அரசி மடியில்
மலர்களின் அரசாட்சி
மலர்க்கண்காட்சி !
 

கருத்துகள்