மழை ! கவிஞர் இரா .இரவி

மழை !           கவிஞர் இரா .இரவி

வானில் இருந்து வரும்
அமுதம்
மழை !

பார்க்கப்  பரவசம்
நனைந்தால் குதூகலம்     
மழை !

பயிர்களின் உயிர் வளர்க்கும்
விவசாயிக்கு வளம் சேர்க்கும்
மழை !
 
குடை வேண்டாம்
தடை வேண்டாம்
மழை !

காதலி  அருகில்  இருந்தால்
காதல் மழை
மழை !

சூடான தேநீர்
சுவை மிகுதி
மழை !

கோடையில் வந்தால்
கொண்டாட்டம்
மழை !

சாலை வியாபாரிகளுக்கு
திண்டாட்டம்
மழை !

குடிசைவாசிகளுக்கு
ஒழுகும்  கவலை
மழை !

கருத்துகள்