ஊடகங்கள் திருந்த வேண்டும் . கவிஞர் இரா .இரவி

ஊடகங்கள் திருந்த வேண்டும் .                கவிஞர் இரா .இரவி

ஊடகங்கள் திருந்த வேண்டும் .பண ஆசை காட்டி வெளியே தெரியாமல் பணம் பறிக்கும் எண்ணத்தைக்  கை விட  வேண்டும்.பணம் வாங்கிக் கொண்டு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அளவிற்கு அதிகமாக முக்கித்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் .ஒரே நடிகர்  படத்தை ஒரே தினத்தில் பல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்புவது  .   பேன்ட்டை  அவிழ்த்து அவிழ்த்துத் திரும்பப்  போடும் காட்சியை ,படத்தில் திரும்பத் திரும்ப இடம் பெறச் செய்த
ஓரு படம் .திரைஅரங்கில் எல்லோரும் முகம் சுளித்தப்படம்  கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகின்றனர் .படம் ஒளிப்பரப்பும்  முன்பு  அதுப் பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி வேறு .

ஒரு நடிகருக்கு பிறந்த நாள் ஆனால் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே வர மாட்டார் .ஆனால் அவரையும் விடுவதில்லை .அவரைப்பற்றி வானளாவப்  புகழச் சொல்லி , இரண்டு  இயக்குனர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி .ஊடகங்கள் சில நல்ல நிகழ்ச்சிகளை ஊறுகாய் போன்று ஒளிப்பரப்பி விட்டு ,பண்பாட்டைச்  சிதைக்கும்  நிகழ்ச்சிகளை  சோறுப்  போல ஒளிப்பரப்புகின்றனர் .ஊடகங்கள் போட்டிப் போட்டு பண்பாட்டைச்  சிதைத்து வருகின்றனர் .செய்தியில் சாமியார்களின் பித்த்லாடங்களை ஒளிப்பரப்பி விட்டு ,சிறிது  நேரத்தில் தொடரில்  சகல் சக்தி உடையவர் சாமியார் என்று ஒளிப்பரப்புகின்றனர் .ஊடகங்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் இனியாவது நடந்துக் கொள்ள வேண்டும் . வீட்டின் உள்ள வரும் நிகழ்ச்சி வீட்டில் உள்ள உறுப்பினர்கள்  எல்லோரும் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை உணர  வேண்டும் .வேண்டும் என்றே ஆங்கிலச் சொற்களில் நிகழ்ச்சியின் பெயர் வைப்பது ,
வேண்டும் என்றே ஆங்கிலச் சொற்கள் கலந்துப் பேசுவது .இவற்றைத் தவிர்க்க முன் வர வேண்டும் .உரத்த சிந்தனை உள்ள அனைவரும் இதற்காகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் .

கருத்துகள்