வழக்கு எண் :18/9 , திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கு எண் :18/9

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல்

தயாரிப்பு UTV & N.லிங்குசாமி


செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப்  படமாக்கி உள்ளார் .ஒரே படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் .சமரசம் இன்றி குத்துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி உள்ளனர் .படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக நடித்து உள்ளனர் .அல்ல பாத்திரமாகவே மாறி உள்ளனர் .அறிமுகம் என்பதே தெரியாத அளவிற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களாக நடித்து உள்ளனர் .நம்ப முடியாத நான்கு சண்டை ,நான்கு காதல் பாட்டு ,வெட்டு குத்து என்று திட்டமிட்டு மசாலாப் படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டிப் புத்தி புகட்ட வேண்டும் .

சிறுவர்களை, வட மாநிலத்தில் ,முறுக்கு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக நடத்திய செய்தி செய்தித் தாளில் படித்த நினைவு உள்ளது .அந்த நிகழ்வை படத்தில் வைத்துள்ளார் .கொத்தடிமையாக வட மாநிலத்திற்கு சென்ற சிறுவனிடம் அப்பா அம்மா இறந்த செய்தியைக் கூட  மறைக்கும் மனிதாபிமானம் அற்ற செயல் கண்டு, கண்ணில் கண்ணீர் வருகின்றது .விவசாய நிலங்களை வீட்டடி மனைகளுக்கும் அவலம் ,குழந்தைத் தொழிலாளர் முறையில்   உள்ள கொடுமை, ஏழ்மையின் இயலாமை ,கந்து  வட்டிக் கொடுமை ,பணக்காரகளின் சதி ,அலைபேசியால் சீரழியும் மாணவ சமுதாயம் ,காவல் துறையின் அவலம், அமைச்சரின் பித்தலாட்டம் ,மெல்லிய  காதல் இப்படி பல தகவல்களை ஒரே படத்தில் தந்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடமாக அசைப் போட்டு இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளார் .படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் செய்தித் தாளில் படித்த செய்திகளே ,காட்சிகளாக வருவதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து படத்தோடு ஒன்றி விடுகின்றோம் .

படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தின் பாதிப்பு நினைவிற்கு வருகின்றது .இதுதான் இயக்குனரின் வெற்றி .இயக்குனருக்கு
க் கைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் வருகின்றது . தேசியவிருது வழங்குவதில் நேர்மை இருக்குமென்றால், இந்தப் படத்திற்கு தேசிய விருது உறுதி என்று ,அறுதி இட்டுச்  சொல்லலாம் . பாடல் ஆசிரியர் நா .முத்துக்குமாரின் பாடல் வரிகள் நன்று .கிராமத்து வாழ்க்கையையும் ,நகரத்து சாலையோர வியாபர வாழ்க்கை ,நகரத்து பணக்கார மாணவனின் வாழ்க்கை அனைத்தையும் மிக இயல்பாக படமாக்கி உள்ளார் .

பணத்திற்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளர் குமாரவேல் அப்பாவி ஏழையை, குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பும் கொடுமைக் கண்டு படம் பார்க்கும் நமக்கும் ஆயவாளர் மீது கோபம் வருகின்றது .படத்தின் கதையை எழுதினால் படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் குறையும் என்பதால் கதையை எழுத வில்லை .

இந்தப்  படத்தின் மூலம் பல்வேறு தகவல்களைத் தந்து சமுதாயம் சீர் பட உதவி உள்ளார் .இந்தப் படம் வெற்றிப் பெறுவது உறுதி .இந்த வெற்றியின் காரணமாக மசாலா இயக்குனர்கள் நல் வழிக்கு வர வாய்ப்பு உள்ளது . தயாரிப்பாளர்களும் இனி இதுப் போன்ற படம் எடுங்கள் என்று சொல்லும் நிலை வரும் .இந்தப் படத்தில் மிகப் பெரிய கதா நாயகன் இல்லை ,மிகப் பெரிய கதாநாயகி இல்லை ,பிரபல சிரிப்பு நடிகர் இல்லை ,கொடூர வில்லன் இல்லை,கவர்ச்சி நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை .   ஆனாலும் படம் வெற்றிப்  பெற்றுள்ளது .ராசரி படம் எடுக்கும் எல்லோரையும் சிந்திக்க வைத்த  மிகச் சிறந்தப் படம் .பாராட்டுக்கள்
--

கருத்துகள்