அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி

அட்சய திரிதி                   கவிஞர் இரா .இரவி

பகல் கொள்ளை
ஆரம்பம் 
அட்சய திரிதி  !

உழைக்காமல் உண்ணும்
சோம்பேறி
சோதிடன் உளறல்
அட்சய திரிதி !

பெருகிட உயிரினமா  ?
தங்கம்
அட்சய திரிதி !

அடகில் மூழ்கியது
வாங்கிய தங்கம்
அட்சய திரிதி !

மூடநம்பிக்கையின் உச்சம்
ஏமாருவதே மிச்சம்
அட்சய திரிதி !

சோதிடன் 
நகைவணிகன்
கூட்டுக் கொள்ளை
அட்சய திரிதி !

உலோகம் பெருகுமா ?
யோசிக்க வேண்டாமா ?
அட்சய திரிதி !

தங்கத்தின் ஆசை
தகர்த்திடுப் பெண்ணே
அட்சய திரிதி !

கொலை கொள்ளைப் 
பெருகிடக்
காரணம் தங்கம்
அட்சய திரிதி !

குடும்பத்தின் நிம்மதி
கெடுப்பது
அட்சய திரிதி !

தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
காரணம்
அட்சய திரிதி !

தரமற்றத்    தங்கம்
தரமென்று விற்கும்
அட்சய திரிதி !

கருத்துகள்