ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                 கவிஞர் இரா .இரவி
வைத்துக் கொண்டப்  பந்தை மிதித்தனர்
தந்துவிட்ட புல்லாங்குழல் முத்தமிட்டனர்
காற்று !


முற்றும் துறந்த முனிவர்கள்
முடி சூடிக் கொண்டார்கள்
தங்கக் கீரிடம் !

ஒரு லட்சம் வாங்கியவர் உள்ளே
பல கோடி வாங்கியவர் வெளியே
இன்றைய  அரசியல் !

ஆலையில் இட்டக் கரும்பாக
விவசாயி
கரும்பு நட்டத்தில் நட்டம்  !

தீக்குளிக்கச் சொன்ன இராமனிடம் 
சீதை சொன்னாள்
முதலில் நீ குதி !  

தலைவர்கள் சண்டை
மக்கள் வேண்டினர்
வேண்டாம் புத்தாண்டு !

மாத
தியம் லட்சத்தில்
மன நிம்மதி   பூஜ்ஜியம் 
கணினிப்  பொறியாளர் !


இருந்தால் நன்றுதான்
ஆனால் இல்லை
கடவுள் !

இல்லம் வந்தது
பால்
கடைக்குச் சென்றால் மது
மதிப்பதில்லை நல்லதை !     
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!

கருத்துகள்