ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                   கவிஞர் இரா .இரவி

உயிரை
அடிப்பான் கொள்ளை 
உடையின் நிறம் வெள்ளை
வெண்சுருட்டு ( சிகரெட் )

தேள் படம் போட்டும்
கவலையின்றி சுவைக்கின்றான்
வருங்கால் மன நோயாளி !  (
பான்பராக் )

குடி குடி கெடுக்கும்
படித்து விட்டு குடிக்கின்றான்
படித்தவன் ?

தெரிந்தே குடித்தனர்
புற்று நோய் வரும்
குளிர்பானம்   !
அழுதாலும்
ஒளி தந்தது
மெழுகு !

வானிலிருந்து குதித்தும்
காயம் இல்லை
மழைத் துளி !

சுமை அல்ல பாதுகாப்பு
கூடு 
நத்தை !

அவள் வரும் முன்னே
வந்தது இசை ஓசை
கொலுசு !


சிதைத்தப்  போதும்
தந்தது வாசம்
சந்தனம் !

அன்று நல்லவர்களுக்கு  மட்டும்
இன்று
கெட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்