வெங்காயம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்கம் ..சங்ககிரி ராச்குமார்
வெளியீடு ..இயக்குனர் சேரன்
தந்தை பெரியார் அடிக்கடி பயன் படுத்திய சொல் வெங்காயம் .வெங்காயம் உரிக்க உரிக்க வெறும் தோல்தான் வரும் .கடைசியில் ஒன்றுமே இருக்காது .அதுப்போல சோதிடம் என்பது ஒன்றுமே இல்லை .சுத்தப் பொய் என்பதை நிருபிக்கும் விதமான கதை என்பதால் வெங்காயம் என்று பயர் வைத்தது மிகப் பொருத்தம் .
இந்தப்படத்தைப் பாத்து விட்டு இயக்குனர் சேரனிடம் பரிந்துரை செய்த நடிகை ரோஹினிக்குப் பாராட்டு .இந்தப்படத்தை ஒரு தலை ராகம், சித்திரம் பேசுதடி திரை படங்ககளைப் போல, மறு வெளியீடு செய்து மக்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் சேரனுக்குப் பாராட்டு .புதியவர்கள், கிராமத்துக் காரர்கள் என்றுப் பார்க்காமல், படத்தில் நடித்து உதவிய திரு சத்யராஜ் அவர்களுக்குப் பாராட்டு .மிகச் சிறப்பாக படத்தை இயக்கி உள்ள இயக்குனர் சங்ககிரி ராச்குமார் அவர்களுக்குப் பாராட்டு.உடனடியாக மாநில அரசு இந்தப்படத்திற்கு வரி விலக்கு வழங்க வேண்டும். மைய அரசு இந்தப்படத்திற்கு விருது வழங்க வேண்டும் .திராவிடர் கழகம் இயக்குனர் சங்ககிரி ராச்குமார்அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி பொற்கிழி பரிசு வழங்க வேண்டும் .
ஒரு நாடக கூத்தாடி. மனைவி இல்லை . மூத்தது மகள் .இளைவன் மகன் . பாசத்தோடு வளர்த்து வருகிறார் .மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் .பாண்டிச்சேரி என்று ஊசி போட பணம், கடன் கேட்கிறார் .இன்று வெள்ளி கிழமை பணம் தரமாட்டோம் .என் லட்சுமி உன்னிடம் போய் விடும் என்று மறுக்கின்றனர் .சக நாடக்கக் கலைஞர்கள் பணம் தந்து உதவுகின்றனர் .மகனை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். மருத்துவமனை இன்று விடுமுறை என்கின்றனர் .அங்கேயே ஒரு ஓரமாக இருக்கிறார் .மகனுக்கு தேநீர் வாங்கி வரச் செல்கிறார் .அதற்குள் ஒருவன் ,சிறுவனிடம் பொம்மைகளைக் காட்டி ஏமாற்றி கடத்திச் சென்று சாமியாரிடம் ஒப்படைகின்றான் .சாமியார் சிறுவன் கழுத்தை நரபலிக்காக அறுத்து விடுகிறான் .மகனைத் தேடி வந்தகூத்தாடியைப் பார்த்ததும் , சிறுவனைப் போட்டு விட்டு ஓடி விடுகின்றனர் .கழுத்து அறுப்பட்ட நிலையில் சிறுவன் வலியில் துடிக்கிறான்.மகனைப் பார்த்து தந்தையும் துடிக்கிறார் .மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார். மருந்து வாங்கி வரச் சொல்கின்றனர் .மருத்துக்கடையில் பணம் இன்றி மருந்துக் கேட்கிறார் .தர மறுக்கின்றனர் .வெளியில் சென்று பிச்சை கேட்கிறார் .கை கால் நன்றாகத்தானே உழைத்துச் சம்பாரி என்கின்றனர் .
நான் ஒரு நாடக கூத்தாடி .உழைப்பாளிதான் என்கிறார் .எங்கே கூத்தாடு என்கின்றனர் .ஆடிக் காட்டுகின்றார் .பணம் தருகின்றார் .அதற்குள் உன் மகன் இறந்து விட்டான் என்கின்றனர் .வேகமாக ஓடுகிறார் .கார் மோதி விபத்தில் இறக்கிறார் .அனாதையான பெண் மகள் .அனாதை இல்லத்தில் வந்து சேர்கிறாள் .அந்த இல்லத்தில் இவளைப் போல சோதிடம் மூட நம்பிக்கையால் அனாதையான சிறுவர்களுடன் சேர்ந்து சோதிடர்கள் சாமியார்கள் கடத்துகின்றனர் .சிறிய காதல் கதையும் உள்ளது .பெரியப் போராட்டத்திற்கு பின் காதலனுடன் திருமணம் செய்ய பெற்றோர்கள் சம்மதிக்கின்றனர் .சாமியார் செவ்வாய் தோஷம் உள்ளது . என்று சொல்லி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி மயக்க மருந்து கலந்து தீர்த்தம் தந்து பலாத்காரம் செய்யும் முயற்சியில் அந்தப் பெண்ணை கொலை செய்து விடுகின்றான் .அந்தப் பெண்ணின் காதலனான காவல் அதிகாரி அந்த சாமியாரையும் கடத்தி வைத்திருக்கும் சோதிடர்களையும் சுட்டு வீழ்த்துகின்றான்.படத்தின் இறுதி காட்சியில் சோதிடத்தால் அனாதையான சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் . அனல் பறக்கும் தீ பொறி வசனங்கள் .படம் பார்க்கும் அனைவரையும் சிந்திக்க வைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .
அம்மா அப்பா இழந்துவிட்ட பேரனை பாட்டி பாசத்தோடு வளர்த்து வருகிறாள் . பேரனுக்கு கத்திப்பட்டு கை விரல் நறுக்கியதும் பாட்டி துடித்துப் போகிறாள் .பாட்டி சுண்டைக்காய் வத்தல் விற்க்கச் சென்றபோது விழுந்து விட்டாள் என்ற செய்திக் கேட்டு ,பேரன் துடித்து விடுகிறான் .பாட்டி பேரன் பாசத்தை மிக நன்குப் பதிவு செய்துள்ளார். படம் பார்க்கும் அனைவருக்கும் அவரவர் பாட்டி நினைவிற்கு வருவது உறுதி .எனக்கு என்னை வளர்த்த பாட்டி மகாலட்சுமி நினைவிற்கு வந்தார்கள் .பேரனும் அவன் நண்பனும் தறி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.அங்கு கூலி மோசடி செய்வதால் , இருவரும் இணைந்து சொந்தமாக தறி நெய்திட திட்ட மிடுகின்றனர் .பாட்டி பேரன் எதிர்காலம் குறித்து கவலையோடு இருக்கும்போது ,நண்பன் சொல்கிறான் .அப்பா அம்மா இருந்து வளர்க்கும் குழந்தைகளே கெட்டப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர் .அப்பா அம்மா இன்றி பாட்டி நீ வளர்த்த உன் பேரன் எந்தக் கெட்டப் பழக்கமும் இன்றி மிக நல்லவனாக உள்ளான் .நன்றாக வருவான் என்று ஆறுதல் சொல்கிறான் .பேரனும் நண்பனும் தொழில் தொடங்க சோதிடனைப் போய் பார்க்கின்றனர் .அவன் வாயிக்கு வந்தப்படி உளறி விடுகிறான் .நண்பனை நீ நன்றாக வருவாய்.பேரனை உனக்கு சனி உள்ளது உன்னுடன் இருப்பவர்கள் செய்துப் போவார்கள் என்று பயமுறுத்தி விடுகிறான் .இதைக் கேட்ட நண்பன் பயத்தில் பிரிந்து விடுகிறான் .பேரன் பாட்டி நம்மால் இறந்து விடுமோ என்ற பயத்தில் ,முதல் முறையாக கள் குடித்து விட்டு தற்கொலை செய்து இறக்கிறான் .பேரனை பிணமாகப் பார்த்த பாட்டி பைய்த்தியமாகிறாள் .பேரன் பாத்திரத்தில் இயக்குனர் சங்ககிரி ராச்குமார் அற்புதமாக நடித்து உள்ளார் .
இப்படி சோதிடத்தின் காரணமாக பல குழந்தைகள் அனாதை ஆகின்றன. அனாதை இல்லத்தில் இருக்கும்போது அங்கு வந்த சத்யராஜ் சிறப்பான பாடல் பாடி பகுத்தறிவை விதைக்கிறார் .பெரியாராக நடித்த சத்யராஜ் ஒரு காட்சியில் பெரியாராக வருகிறார் .
நடிகர் ,நடிகை கால் சீட்டு க்குக் காத்திருந்து படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர்கள் உள்ள உலகில் ,கேமிராவிற்காக காத்திருந்து அது கிடைத்தவுடன் தன குடும்பம்,தன ஊர் மக்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வெறிப் பெற்றுள்ள இயக்குனர் சங்ககிரி ராச்குமார் எப்படி? பாராட்டுவது என்றே தெரிய வில்லை .படத்தில் குத்துப்பாட்டு இல்லை ,வெட்டுக் குத்து இல்லை .ஆபாசம் இல்லை ,வக்கிரம் இல்லை, வன்முறை இல்லை .ஆனால் மக்களை பகுத்தறிவு வாழ்க்கைக்கு மாற்றும் விதமாக எடுத்து உள்ளார் .இந்தப் படத்தை சமுதாயத்தைச் சீரழிக்கும் , மசாலாப் படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் அனைவருக்கும் காண்பித்துத் திருத்த வேண்டும் . தொழில் முறை நடிகர்கள் இல்லாததால் ,கிராம மக்களே நடித்து இருப்பதால் ,படம் பார்க்கிறோம் என்பதை மறந்து ஒரு கிராமத்தில் இருப்பதுப் போன்ற உணர்வு வருகின்றது .இயக்குனரின் வெற்றி .
சோதிடம் மூட நம்பிக்கை என்றக் கருத்தை ஆணித் தரமாகப் பதிவு செய்துள்ளார் .இந்தப்படம் பார்த்தப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்ன சொற்கள் என் நினைவிற்கு வந்தது . எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் கோடி கோடி மைல்களுக்குப் அப்பால் உள்ள கிரகங்கள் மண்ணில் உள்ள நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை நம்பவில்லை .சோதிடம் நம்பும் மக்கள் திருந்த வேண்டும் என்பதே படத்தின் நோக்கம் .சாமியார்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டி உள்ளார் .பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் ஓடிப் போன பித்தலாட்ட சாமியார்களை இன்னும் நம்பும் அவலம் நம் நாட்டில் இன்றும் நடக்கின்றது. தொலைக்காட்சியின் செய்தியில், சாமியார்களின் பித்தலாட்டம் காட்டுகின்றனர் .ஆனால் அதே தொலைக்காட்சியில் தொடரில், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சாமியார் சர்வ சக்தி மிக்கவர் என்று காட்டும் முரண்பாடே மக்கள் ஏமாறக் காரணமாகின்றது .
பிறந்த நேரம் எது?என்று சொல்வதில் சொதிடர்களுக்குள் உள்ள முரண்பாடு .பிறந்த நேரம் சரி இல்லை அதனால் துன்பம் என்கின்றனர் ,சுனாமியில் இறந்த அனைவரும் ஒரே நேரத்திலா பிறந்தார்கள் .இப்படி அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் . நம் மக்கள் குப்பை படத்தை ஓட வைத்து விடுகின்றனர் .அதன் காரணமாகவே குப்பை இயக்குனர்கள் காட்டில் மழை. மக்கள் இதுப்போன்ற அறிவார்ந்த சிறந்த படத்தை நூறு நாட்கள் ஓட வைக்க வேண்டும் .அனைவரும் அவசியம் திரை அரங்கம் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்.இந்தப் படம் நூறு நாட்கள் ஓடி முடிந்தப் பின் தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இந்தப்படத்தைப் போட்டுக் காட்டி மாணவர்களுக்கு பகுத்தறிவை விதைக்க வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக