ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்கம் . ராஜேஷ் .M

நடிப்பு ,தயாரிப்பு உதயநிதி  ஸ்டாலின் 


தயாரிப்பாளராக இருந்த உதயநிதி  ஸ்டாலின்  நடிகர்கள் படுத்தியப்   பாடு தாங்க முடியாமல், நாமே நடித்தால் என்ன ? என்று முடிவு எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் .நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .நகைச்சுவை கதை என்பதால் தப்பித்து விட்டார் .படம் தொடங்கியது முதல் முடியும் வரை குறுந்தாடியுடனே வருகிறார் ,காதலிக்கும் பெண் , தினம் முகச் சவரம் செய்பவர்தான் எனக்குப் பிடிக்கும் என்று நிபந்தனை போட்டும்  தாடியுடனே வருகிறார்.தொடந்து நடிப்பதாக முடிவு எடுத்தால் ,நடிப்பில் பயிற்சி பெறுவது நல்லது .

நகைச்சுவை கலந்த காதல் கதை .நடிகர்  சந்தானம் படத்திற்கு பக்க பலமாக உள்ளார் .சந்தானம் இல்லை என்றால் படம் இல்லை. தயாரிப்பாளர் உதயநிதி    ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார் .முகத்தை எப்பொதும் ஒரே மாதிரியாகவே வைத்துள்ளார் .  நடிகை ஹன்சிகா மோட்வாணி  அழகுப் பதுமையாக வந்து போகிறார் .படத்தின்  திரைக்கதை, வசனத்தில்  நல்ல நகைச்சுவை இருப்பதால் .படம் போரடிக்காமல்  செல்கின்றது .இசை ஹாரிஸ் ஜெயராஜ் நன்றாக உள்ளது .பாடல் நா .முத்துக்குமார் திட்டமிட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் . தமிழ்த் திரைப் படத்தில்  வரும் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல் எதற்காக ? பாடல் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் .நீங்கள் ஆங்கிலம் கலந்து எழுதும் பாடலைத்தான் இளைய சமுதாயம் பாடி வருகின்றது .ஆங்கிலம் கலந்து எழுதுங்கள் என்று உங்களிடம் யார் கேட்டது .ஆங்கிலப் படங்களில் பாடலே கிடையாது .ஒரு வேளை பாடல் வைத்தால் அவர்கள்  ஆங்கிலப் பாடலில் தமிழ் கலந்து எழுதுவார்களா ?   சிந்தித்துப் பாருங்கள் .


உதயநிதி  ஸ்டாலின் அம்மாவாக தேசிய விருதுப் பெற்ற நடிகை சரண்யா மிக நன்றாக நடித்து உள்ளார் .திருமணத்தின் போது கணவரிடம் பட்டப் படிப்பு முடித்து விட்டதாகப் பொய் சொன்னதன் காரணமாக ,கணவர் இருபது ஆண்டுகளாக பேசாமல் கோபத்துடன் இருக்கிறார் .பட்டப் படிப்பை முடிக்க தொடர்ந்து சரண்யா தேர்வு எழுதுகிறார் .தோல்வியே அடைகிறார் .மனைவி காணவில்லை என்றதும் கணவன் துடித்துத் தேடும்  காட்சி நெகிழ்ச்சி .மகனின் காதலுக்கு உதவும் வித்தியாசமான அம்மாவாக வருகிறார் சரண்யா .

ஒளிப்பதிவு மிக நன்று .பல்வேறு நாடுகளுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளை நன்கு படப்பிடிப்பு செய்துள்ளனர் .இளைஞர்கள் காதலிக்கும் காலத்தில் காதலியா ? நண்பனா ?   என்ற கேள்வி வரும்போது ,பெரும்பாலானவர்கள் காதலியை தேர்ந்தெடுப்பார்கள் .   உதயநிதி  ஸ்டாலினும் காதலியை தேர்ந்தெடுத்து விட்டு நண்பனான சந்தானத்தை  அடிக்கடி கழட்டி விடுவதும் .சந்தானம் கோபப் படுவதும்  அம்மா சரண்யா சமாதானம் செய்து சேர்த்து வைப்பதும் ,நல்ல நகைச் சுவை .

படத்தின் இறுதிக் காட்சியில் ஆர்யா வருகிறார் .அவர் வரும் காட்சியும் நல்ல நகைச் சுவை . சினேகா சில காட்சிகளில் வருகிறார் .விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக வருகிறார் .ஹன்சிகா மோட்வாணி பணிப்பெண் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போது விரட்டி விரட்டி காதலிக்கிறார் உதயநிதி  ஸ்டாலின் .காதலை ஏற்க மறுக்கிறார்  .விமானத்தில் பணிப்பெண்ணாக பயணிக்கும்போது , உதயநிதி  ஸ்டாலினும், சந்தானமும் விமானத்தில் பயணியாகப் பயணித்து ஹன்சிகா மோட்வாணியிடம் கலாட்டா செய்கின்றனர் .

ஹன்சிகா மோட்வாணியிடம், விமானத்தில் சன்னல் ஓர இருக்கை வேண்டும் என்று சண்டைப்போட ,படி ஓரம் இருக்கை கொடுங்கள். இல்லாவிட்டால் விமானி அருகில் உட்கார  விடுங்கள் .குடிப்பதற்கு மது கொடுங்கள் என்பது ,வெளிநாட்டுப் பயணத்தின் போதுதான் மது தருவோம் .என்பதும் ,ஏமாற்றுகின்றனர் என்று கலாட்ட செய்வதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை .

இயக்குனர் M. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .திரைக்கதையைத் தொய்வின்றி நகைச்சுவையாகவே  நகர்த்திச்  சென்று வெற்றிப் பெற்றுள்ளார் . சமீபத்தில்  வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப்  பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப்    பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது  பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள்   குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்