ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி

ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு    உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .

ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக்  கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர்  .நக்சல் ஏன் ?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ழல் ஒழிய வேண்டும் .

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.இத்தாலிக் கார்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ?

இத்தாலிக்காரர்களை மீட்டதுப்  போல ,தமிழரையும் மீட்க வேண்டும் .  உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் .    ஆஸ்துமா நோய் உள்ள நபர்    ஆட்சியர்,மருந்து உண்ண வேண்டும். கடத்தப் பட்டு பல நாட்கள் ஆகியும் ,அவர்கள் விதித்த காலக்கெடு முடிய உள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலக்சை   மீட்க வேண்டும்.

ஆளும் காங்கிரஸ்  தமிழர் உயிர் என்றாலே மாற்றான் தாய் மனப் பான்மையுடன் நடந்துக் கொள்கின்றது .கடத்தப் பட்டது ஒரு வடவராக இருந்து இருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்து மீட்டு இருக்கும் .இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டப் போதும் ,தமிழகத்தில் தமிழர்கள் தீக் குளித்தப் போதும் ,தமிழர்களுக்கு தூக்குத்  தண்டனை விசயத்திலும் ,ஆளும் காங்கிரஸ்  ஏனோ தானோ என்றே நடந்து கொள்கின்றது .விரைவில் திருந்த வேண்டும் காங்கிரஸ்.திருந்த மறுத்தால் காங்கிரஸ் வரும் பொதுத் தேர்தலில் தோற்பது உறுதி .உள் துறை அமைச்சகம் இத்தனை நாளாக என்ன ? செய்தது .தமிழ் உயிர் என்றால் மட்டமா ? உடனடியாக மாவோஷ்டுகளிடம்   பேச்சு வார்த்தை நடத்தி
மீட்க வேண்டும்.தமிழா உயிர் என்றால் மட்டமா? மத்தியில்  ஆளும் காங்கிரஸ் திருந்தாதா ?  தமிழர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுங்கள் .வரும் முன் காப்போம் .உயிர் போகும் முன் காப்போம் .

கருத்துகள்