நித்திரைப் பயணங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி. விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நித்திரைப் பயணங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.

தகிதா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 50.

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நூல் கிடைக்குமிடங்கள்  

சர்வோதய இலக்கியப் பண்ணை ,மேல வெளி வீதி ,மதுரை .1

மல்லிகை புத்தக நிலையம் , மேல வெளி வீதி ,மதுரை.1

நூலின் தலைப்பே நமை சிந்திக்க வைக்கின்றது .கனவு என்பதை நித்திரைப் பயணங்கள் இப்படி கவித்துவமாகவும் 
சொல்ல லாம் என்பதை உணர்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.அட்டைப் பட வடிவமைப்பு அருமை. ஆங்கில இலக்கியம் ,சட்டம் படித்துவிட்டு கவிதை எழுதுவதற்கு முதலில் பாராட்டுக்கள் .கலை மாமணி,பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கை எழுத்திலேயே வந்து இருக்கும் இரண்டாவது அணிந்துரை இது .மிக நன்று .

பேராசிரியர்  ,கலைமாமணி  கு. ஞானசம்பந்தன்  வர்களின் அணிந்துரை .இரண்டு இலக்கிய இமயங்களின் அணிந்துரை கவிதை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி வித்தியாசமாகச் சிந்திக்கிறார் .நிலவு அழகு என்றுதான் பலரும் பாடி உள்ளனர் .நிலவு பற்றி அவரது வரிகள் .

உண்மையைத் தேடி !
வெப்பத்தைக் கக்கிய நிலவு 
மனது கனத்தது 
மீண்டும் அந்த பயணம் 
உண்மையைத் தேடி !  

இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .


அல்லி  இதழால் அவளுக்கு இசைந்திடடி ..

மலர்த்தோட்டம் மலர்ந்தும் மலராத அரும்புகள் 
பனித்துளியின் சிலிர்ப்பு புகை கவிரி கொண்டு 
நினைவுகளை வருடுகிறேன் !  

  தெற்குத் தொடர் வண்டித் துறையில் வர்த்தக ஆய்வாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியப் பணி .    நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி பற்றி  தகிதா பதிப்பகம் எழுதியது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தேன் .அவரை நேரடியாக சந்தித்தப் போது . முழுமையான உண்மை ,களங்கமற்ற அன்பு ,தற்சார்பு இல்லாத நியாயம் ,சமரசம் செய்யாத சத்தியம் ,பாரபட்சமில்லாத பாசம் ,எதிர்பாப்பில்லாத உறவு இவைகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிற அரிய மனிதர்தான் இந்த பீர்ஒலி .

காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடதவர் கவிஞரே இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ. பீர்ஒலிஅவர்களும் காதலைப் பாடி உள்ளார்.


மலரவிடப் போவதில்லை !  

என் மனத் தோட்டத்தில் பார்வைகள் 
விதைத்துச் சென்ற காதல் அரும்புகளை 
மலரவிடப் போவதில்லை !  

எங்கு சென்றிட்டாய் !


உன்னில் என்னையிழந்து 
என்னில் உன்னைத் தேடி 
மதுரவாய் மலர்ந்து 
மகர யாழ் மொழி பேசி 
காதல் மலர்கள் 
கனவுக் கோட்டையில் !

உன்னில் என்னையிழந்து ,என்னில் உன்னைத் தேடி கவிதைகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் .
பாராட்டுக்கள் .
இயற்கையை உற்று நோக்கி இயற்கையோடு இயற்கையாக இரண்டரக் கலந்து கவிதை வடித்துள்ளார் .இவருக்கு இயற்கை ரசிக்க எப்போது நேரம் கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .உள்ளத்து உணர்வு கவிதை .தான் உணர்ந்தவற்றை கவிதையாக்கி உள்ளார் .

ஒரு கவிதை அரங்கேறிக் கொண்டிருக்கிறது !

ஆகாயம் குடை பிடிக்க 
நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் துவங்கின ..
திரை விலகி புதினமாய் 
வெட்கி நகைத்தாள் நிலவுப்பெண் !
  நீ ....நான்...அந்தநிலவு ...

நட்சத்திரங்களை தோற்கடிக்கும் 
மின்மினி  பூச்சிகள் ஆகாங்கே   
வட்டமிட்டுக் கொண்டிருந்தன 
பவுர்ணமி இரவு 
நிலவின் பரிணாமத் தோற்றம் 
நீ ....நான்...அந்தநிலவு ...    
கவிதைகளை ரசித்து ,ருசித்து ஈடுபாட்டுடன் எழுதி உள்ளார் .
நித்திரைப் பயணங்கள் 
புறப்பாடு 
நெஞ்சகத்தில் ற்றுவித்த காதல் சுனை நீரில் 
காலமெல்லாம் மிதந்திடவே கனவிலும் நினைவிலும் 
கதறி ...அலைகின்றேன் காணலியே !

தத்துவ கவிதைகளும் நூலில் உள்ளது.

மனித இனம் !

கருவறை இருட்டு கல்லறை நிசப்தம் 
பிரகாசித்தவன் 
இந்த பிரபஞ்ச ஒளியில் 
இருண்டு கிடந்தான் !

நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .புரியாத புதிரான இருண்மை கவிதைகள் இதில் இல்லை .அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள்.       

கருத்துகள்

கருத்துரையிடுக