யாரும் யாராகவும் ...
நூல் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் விருதாளர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் ervadiar@yahoo.co.in
விலை ரூபாய் 70 கவிதை உறவு 420E .மலர்க் காலனி ,அண்ணா நகர் மேற்கு ,சென்னை .40
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கலைமாமணி விருது பெற்றவர் .அவர்கள் கவிதை உறவு என்ற மாத இதழை 25 வருடங்களுக்கு மேலாக தொய்வின்றி நடத்தி வருபவர் . கணினி உலகில் இன்று மாத இதழை நடத்தி வருவதே பெரிய சாதனை தான் .கவிதை உறவு இதழின் 7ஆம் பக்கத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகி உள்ளது .கவிஞர் கல்யாண்ஜி அவர்களின்அணிந்துரை
நூலிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது .நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப் பட்ட புரட்சிக் கவிஞர் விருதைப் பெற்றவர் .பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் .இலக்கியத்தை, கவிதையை மூச்சாகக் கொண்டு வாழ்பவர் .கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் .பழகுவதற்கு இனிமையானவர் .மென்மையானவர் ,இவர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை .கவிதை மட்டுமல்ல கட்டுரை ,கதை எழுதும் பன்முக ஆற்றல் பெற்றவர் .மிகச் சிறப்பாக நூல் விமர்சனம் கவிதை உறவு இதழில் எழுதி வருபவர் .உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் பிறந்த மண் பற்று இருக்க வேண்டும் .கலைமாமணி எஸ் ராதா கிருஷ்ணன் அவர்கள் தான் பிறந்த ஊரான ஏர்வாடி என்பதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவர் .இவரை பலருக்கு எஸ் . ராதா கிருஷ்ணன் என்றால் தெரியாது ஆனால் ஏர்வாடியார் என்றால் எலோருக்கும் தெரியும் .
,
கவிதை வாழ்க்கை !
எழுதுகின்ற திறனெல்லாம்
எவருக்குமிங்கே வரக்கூடும்
எழுதுகிற தகுதிமட்டும்
இருப்பவர்கள் மிகக்குறைவு !
சிலர் நகைச்சுவையாக சொல்வதுண்டு மக்கள் தொகையை விட கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம் என்று .இன்று பலர் முற்போக்காகக் கவிதை எழுதுகின்றனர் எத்தனைபேர் எழுதியபடி வாழ்கின்றனர் .மகாகவி பாரதி குறிப்பிட்டதுப் போல கவிதை எழுதுவோர் கவிஞர் அன்று.
கவிதையாக வாழ்பவரே கவிஞர் என்ற கருத்தை வழி மொழிவதுப் போன்ற கவிதை !பாராட்டுக்கள் .
கவிதை சிலருக்கு !
கவிதை பலருக்கு
விதையாக இருக்கிறது
விளைவிக்கிறார்கள் .
கவிதை சிலருக்குதான்
கவிதையாக இருக்கிறது
காலத்தை வெல்கிறார்கள் .
எர்வாடியார் எழுதியது உண்மைதான் .பலர் பணத்திற்காக கவிதை எழுதி பணம் சேர்க்கிறார்கள்.ஆனால் பணத்தை பெரிதாய் எண்ணாத மகா கவியும் ,புரட்சி கவிஞரும் எழுதிய கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம் .
நூல் முழுவதும் கவிதைகள் தெளிந்த நீரோடை போன்ற நடையில் செல்கின்றது .நூலை வாசிக்கும் வாசகர்களின் மனதை மயில் இறகுப் போல சுகமாக வருடுகின்றது .தென்றலைப் போல இதமாக உள்ளது கவிதைகள் .
உலகில் உறவுகள் பல உண்டு ஆனால் அம்மா என்று உறவுக்கு ஈடு இணை எது ?நூல் ஆசிரியர் அம்மா பற்றி மிக உருக்கமான கவிதை எழுதி உள்ளார் .
அம்மாவின் சேலை !
அது பருத்தியால் மட்டுமன்று
பாசத்தாலும் நெய்யப்பட்டது
தான் அழுத கண்ணீரை
அந்த முந்தாணையில்தான்
அவள் துடைத்திருப்பாள் .
அவள் உடுத்திய
சேலைகள் கிழிந்திருக்கலாம்
அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும்
இன்னும் அப்படியே !
மனைவி பற்றியும் மறக்காமல் கவிதை வடித்துள்ளார் .கவிதையின் தலைப்பே மனைவியை உச்சத்தில் வைத்து மகிழும் விதமாக உள்ளது .
என் இரண்டாம் தாய் !
நீ ...
அணைக்க மட்டுமே
அறிந்திருக்கிற ஆண்களை
அணையாதிருக்க
அருள்கிறவர்கள் பெண்கள் !
உண்மைதான் மனைவி மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளா விட்டால் கணவன் என்ற ஜோதி என்றோ மறைத்திருக்கும் .கணவனின் வாழ்நாள் நீடிப்பே மனைவியின் நேசத்தில் ,பாசத்தில் உள்ளது .
பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் விதமாக உள்ள கவிதை !
இல்லாமலே இரு இறைவா !
ஏழைகளின் சிரிப்பில்
இறைவன் இருப்பதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
ஏழைகளைச் சிரிக்கவிடு
நீ ...இருப்பதை ஒப்புக்கொள்கிறோம் !
இன்று புதிதாக அந்த தினம் இந்த தினம் என்று தினம் தினம் ஒரு கொண்டாட்டம் வந்து விடுகின்றது .அது பற்றி ஒரு கவிதை இதோ !
தினந்தோறும் தினம் தான் !
தினந்தோறும் ஏதாவது
தினம் வந்து போகிறது .
அந்த தினம் பற்றி
அன்றைய தினம் மட்டுமே பேச்சு
அடுத்த நாள் அது
மறுதினமாகி விடுகிறது !
சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதைகள் நூல் முழுவதும் உள்ளது .பாராட்டுக்கள் .ஜென் தத்துவம் போன்ற நல்ல கவிதை இதோ !
அது மட்டும் ...
அந்தந்த நொடிச்சுகம்
அடைய வேண்டுமா
அடுத்த நொடியை மறுந்துவிடு !
தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சி வருகையின் காரணமாக இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவது இல்லை .கூட்டம் இல்லாமலே பல கூட்டம் முடிந்து விடுகின்றது .
கூட்டத்தோடு கூட்டம் !
கூட்டம் இல்லாமல்தான்
கூட்டங்கள் நடக்கின்றன
ஆயிரம் அழைப்பிதழ்கள்
அனுப்பியபோதும்
அதில் பாதிகூட
அரங்கத்தில் சேர்வதில்லை .
இயற்கை நேசத்துடன் ஆலைகள் மட்டும் போதாது .இனிய சோலைகள் வேண்டும்,சாலையில் வேண்டும் கவனம் . என்று குரல் தரும் கவிதை
சோலைகள் செய்வீர் !
வேகம் வேண்டியதுதான்
வேகமாகவே உங்கள் வாழ்க்கை
முடிந்துவிட வேண்டாம் .
சாலைச் சந்தடிகளை விடுத்து
இனி சோலைகளின் சங்கீதத்தைச்
செவிமடுக்கப் பாருங்கள் .
கவிதை உறவு மாத இதழில் மாதா மாதம் படித்த கவிதைகள் என்றாலும் மறு வாசிப்பு சலிப்பு வர வில்லை. மாறாக திரும்பத் திரும்ப வாசித்து சுவைக்கும் விதமாக இருந்தது .படிக்கும் வாசகர்களின் உள்ளதை நெறிப் படுத்தும் விதமாக ,மனித நேயம் கற்பிக்கும் விதமாக , மனிதன் மனிதனாக வாழ வைக்கும் வாழ்வியல் கருத்துக் கூறும் விதமாக நூல் உள்ளது . பாராட்டுக்கள் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக