குயிலின் நிறம் நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குயிலின் நிறம்

நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காலம் வெளியீடு புதுக்கோட்டை.


புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர்.  ரமா
ராமநாதன்.  சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம் ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட  முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை அற்புதம் .அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு முதல் அறுபது  வரை   அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் . மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை   நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .


ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !
 

கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .

வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !

தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .
  
கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .

விற்பனைக்கு மல்லிகைப் பூ
இலவசமாய் ...
வாசம் !
 

சூரியனுக்கு  ஆணை இடுகின்றார் பாருங்கள் .

மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில் 
பனித்துளி !

இயற்கையை  உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .

எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை 
ண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !

வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை , மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கு், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள் வைக்கின்றார் .

வரிகளைக் 
கூட்டாதீர்   
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும்   !

,
வறுமை ஒழிப்போம்  என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை ,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின் வறுமையை யாருமே ஒழிப்பதில்லை. 
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !


மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும்  ஒரு ஹைக்கூ .

காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக்
கூடம்  !

சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் தியம்  உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .

சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !


ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .

விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம்  !


பூவை உவமைக்  காட்டி  வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .

சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ ! 

குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப்  போன்ற வெண்மை குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை விதைகின்றார் .

மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது .அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம்

கருத்துகள்