3 மூன்று திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

3  மூன்று

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

நடிப்பு . தனுஷ்

இயக்கம்
.அய்ஸ்வர்யா R.தனுஷ்

நடிகர்  தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி
ள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல் நன்றாக  வேலை செய்துள்ளது .  மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்தது வியப்பு .முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல  பள்ளியில் காதல் .வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற  வேண்டும்   என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின் தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம் .

.

உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து  தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை   எடுக்கக் கூடாது  என்று தடை உத்தரவு வாங்க  வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய  (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல்  குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று  நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .
படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை  வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக  இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப்  போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை தீர்வு அன்று  என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத்  தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம்  என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக  தனுஷ் நடிப்பதற்கு  அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும்  கஷ்டப் படுத்தி உள்ளார்  .சண்டைக்  காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப்  பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில்   நிறைய    உள்ளது .


புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர்  கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம்  என்ன ? சொல்ல வருகிறார்  என்பது, இயக்குனருக்கே  வெளிச்சம் .மன நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத்  தூண்டும் விதமாக படம் உள்ளது .தனுக்குத்தானே கத்தியை வைத்து அறுத்து  தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை  கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்து  எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல்  .ஒருவர் சிவா கார்த்திகேயன் பேசும்  நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன் காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .  

பிரியமாக வளர்த்த நாய்  கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும்  காட்சி கொடூரம்.  நாயை
க் கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது  ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது வக்ரம் .

  வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே   உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு  வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .  

தமிழ்த்  திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச்  சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து    படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு  உணர்வுடன் படம் எடுங்கள் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்