அரவான் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி கூடுதல் கதை, இயக்கம் G.வசந்தபாலன்

அரவான்

திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி

கூடுதல் கதை, இயக்கம் G.வசந்தபாலன்

கதை ,வசனம் சு .வெங்கடேசன்

தயாரிப்பு வேந்தர் மூவீஸ்,அம்மா கிரியேசன்ஸ்  

சாகித்ய அகதமி விருதுப் பெற்ற சு .வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலின் ஒரு பகுதி கதையுடன்
,கூடுதல் கதையைச் சேர்த்து வெயில் அங்காடித் தெரு திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் கை வண்ணத்தில் ஒருவான படம் அரவான் .18ஆம் நூற்றாண்டுக் கதை .
 ஆதி ,பசுபதி ,இயக்குனர் சிங்கம் புலி என படத்தில் நடித்துள்ள அனைவரும் போட்டிப் போட்டு நடித்து    உள்ளனர் .இல்லை இல்லை அந்தப் பாத்திரமாகவே மாறி  உள்ளனர் .படம் பார்பவர்களை 18ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று விடுகிறார் இயக்குனர் வசந்தபாலன்.திருடும் திருடர்கள் பற்றிய கதை .திருடுவதில் உள்ள நுட்பம் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளனர் .குற்றப் பரம்பரை கதை .தன் ஊர் மக்களின் பசிப் போக்க பசுபதி கொத்தாக சிலருடன் சென்று திருடி ,அந்த நகைகளைக் கொடுத்து கேப்பை வாங்கி வந்து கொடுத்து மகிழ்கின்றார் .

ராணியின் வைர அட்டிகை திருடு போனதும் பசுபதி ஊருக்கு வந்து ,அரண்மனை ஆள்கள் வந்து சண்டைப் போட உடன் பசுபதி நாங்கள் திருடவில்லை திருடியவனை கண்டுபிடித்து  ராணியின் வைர அட்டிகை மீட்டித் தந்தால் என்ன ? தருவீர்கள் என்கிறார் .100 மூடை  நெல்  தருவோம் என்கின்றனர் .பசுபதி பயணம் செய்து திருடிய ஆதியைக் கண்டுபிடித்து  வைர அட்டிகை மீட்டி100 மூடை  நெல் பெற்று ஊருக்கு வழங்கி மகிழ்கின்றார் .திருடன் ஆதியும் பசுபதியும் நண்பர்களாகி திருட்டுத் தொழில் செய்கின்றனர் .

ஜல்லிக் கட்டின் போது ஊர் மானம் காக்க பசுபதியின் உயிரை காப்பாற்றுகிறார் ஆதி .களவுக்கு நேரம்,காலம், திசை  இப்படி பல நுட்பம் உள்ளது என்று ஆதிக்கு கற்றுத் தருகிறார் பசுபதி .பசுபதி வெயில் படத்தை விட இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .இந்தப் படத்தில் நன்றாக நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார் .இயக்குனர் வசந்தபாலன்.திருடும்போது கிணற்றில் விழுந்த பசுபதியை ஊர் மக்கள் அடித்துக் கொல்லப் போகும்போது ,ஆதி மாடுகளுடன் வந்து பசுபதியின் உயிரைக் காப்பாற்றும் காட்சி ஒளிப்பதிவு மிகச் சிறப்பு .
களவாட சென்ற வீட்டில் ஒரு பெண் தூக்கு மாட்டி செத்து பிணமாக இருக்கிறாள் .செத்த வீட்டில் திருடக் கூடாது .என்று திருடாமல் வருகின்றான் ஆதி .ஏன்? என்று கேட்டபோது திருடன் கொலை செய்து விட்டான் என்ற கொலை பழி வந்து விடும் .என்று சொல்லி திருட்டில் உள்ள நியாயத்தைச் சொல்கிறான் .  

செய்யாத கொலைக்கு நிரபராதியை கொலை செய்யத் துடிக்கும் ஊர் .இரண்டு ஊருக்கே இடையே ஏற்கெனவே   பகை .பகை ஊரைச் சேர்ந்தவன் கழுத்து அறுக்கப் பட்டு பிணமாக இருக்கிறான் .பகை ஊர்க் காரன் வந்துப் பார்த்து விட்டு நீங்கள் தான் கொலை செய்து விட்டீர்கள். என்கிறான் .ஊர் மக்கள் கொலை செய்ய வில்லை என்று மறுக்கின்றனர்.  கலவரம் ,வெட்டுக் குத்து தவிர்க்க கொலையாவன் வயதில் ஒருவனை பலி கொடுக்க வேண்டும் என்று மன்னன் தீர்ப்புச் சொல்கிறார் .உடனே சில இளைஞர்களை நிறுத்தி ஆளுக்கு ஒரு வித கல் தந்து குலுக்கி எடுக்கும் போது ,ஆதி பலி ஆளாக தேர்வுச் செய்யப் பட்டு .பலிக்கான நாள் குறிக்கின்றார்கள் .கொலை செய்யாமல் கொலை செய்யப் படப் போவதை நினைத்து ,ஆதியின் தவிப்பு வலி நம் கண்களை கலங்க வைக்கின்றது .படம் பார்க்கும் போது தூக்குத் தண்டனை கைதிகள் நம் மனக் கண் முன்னே வந்து விடுகின்றனர் .அதுதான் வசந்தபாலன்  வெற்றி .
யார் ? கொலை செய்து இருப்பார்கள் என்று  ஆதி ஆராயும்போது நாம் நினைத்துப் பார்த்து இராத ஒருவர் கொலை செய்து விட்டு நிரபராதியை  கொலை செய்யத் துடிக்கும் மடமை . 

வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது கிடைத்ததுப் போல ஆரவனுக்கும்  தேசிய விருது உறுதி .துணை  இயக்குனர்கள்   அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் .கதை என்பதால் மிக நுட்பமாக படம் எடுக்க உதவி உள்ளனர் . பாடல் இசை பின்னணி இசை நன்றாக உள்ளது .நா .முத்துக்குமார் ,விவேகா பாடல் வரிகள் நன்று .பிரமாண்டம் என்ற பெயரில் கோடிகளை இரைத்து மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இந்தப் படத்தை அவசியம் பார்த்துத் திருந்த வேண்டும் .தமிழ் திரைப் படத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற  இயக்குனர்  வசந்தபாலன்அவர்களுக்கும் ,மதுரை மண்ணின் மைந்தன்  கதை ,வசனம்எழுதிய  சு .வெங்கடேசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

படத்தின் முடிவில்  எனக்கு உடன் பாடு இல்லை .நிரபராதியை ஏன் ? சாகடிக்க வேண்டும் .உண்மையாக கொலை செய்தவர் தற்கொலை செய்து விடுகிறார் .உண்மையான கொலையாளியை  ஊருக்கு தெரியப் படுத்தாமலே ஆதி ஏன் ? சாக வேண்டும் . ஆதி ஊரை விட்டு சென்று விட்டதால் ஆதியின் மாப்பிளையை பலி கொடுத்து விடுகின்றார்கள்.பலி கொடுக்கப் பட்ட மகனை வைத்து ஆதி வெட்டச் சொல்லும்போது சிறுவன் தயங்க ஆதியே வாளை வாங்கி    தனுக்குத் தானே வெட்டிக் கொள்வது சரி இல்லை .நம் மனம் வலிக்கின்றது .ஆதிக்கும் மனைவி இருக்கிறாள் மகன் இருக்கிறான்  ,குடும்பம்  இருக்கும் போது அநியாமாக ஆதி ஏன் சாக வேண்டும் .எப்படி பல கேள்விகள் நம் மனதில் எழுப்பி வெற்றிப் பெற்றுள்ளார் .படத்தின் இறுதியில் மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் என்ற  கருத்தை வலியுறுத்தி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் .மனித நேய ஆர்வலர்களின் விருப்பம் .    

ஆதி உயிரோடு இருந்து இருந்தால் படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து  இருப்பார்கள் படம் பார்த்து முடிந்தவுடன் நம் மனதிற்கு மரண தண்டனை விதிக்கப் பட்ட யாருக்கும் மரண தண்டனை தரக் கூடாது .படத்தில் ஆதி கொல்லப் படத்துப் போல நிரபராதிகளும் கொல்லப் பட வாய்ப்பு உள்ள காட்டுமிராண்டித் தனமான மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் .

நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது .நீதிமன்றத்தின் பொன்மொழியாக மட்டுமன்றி கடைப்பிடிக்கும் நீதியாக வேண்டும் .இப்படி பல்வேறு கருத்துக்களை மனதில் விதைகின்றது அரவான் .இந்த அரவான் படத்தின் ஒட்டு மொத்த கலைஞர்கள் ,தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் .


கருத்துகள்