மதுரையில் நினைத்தபோதெல்லாம் மின் தடை .மக்கள் மிகவும் வருத்தத்திலும் ,வேதனையிலும் உள்ளனர் .மாணவ, மாணவியர் தேர்வு நெருங்குவதால் படிப்பதில் சிரமம் .வயதானவர்கள் ,நோயாளிகள் மிகவும் சிரமப் படுகின்றனர் .சென்ற ஆட்சியில் அறிவித்து விட்டு மின்தடை செய்ததே தவறு என்ற கோபத்தில் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தனர் .
இந்த ஆட்சியில் இரவு, பகல் பாராமல், அறிவிக்காமல் மனம் போனப் போக்கில் மின் தடை செய்கின்றனர் .மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் .மின்தடை மைய அரசால் திட்டமிட்டு திணிக்கப் பட்டு உள்ளது என்ற சந்தேகமும் மக்களுக்கு வருகின்றது .
சிறு தொழில் ,பெரு தொழில் .வணிக நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரும் சிரமப் படுகின்றனர் .தமிழ் நாட்டு அனல் மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி முழுவதும் தமிழகத்திற்கே பயன் படுத்துக.
எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல !
------------------------------
எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல மதுரையில் தலைக்கவசம் கட்டாயமாகப் பட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர். பார்வை மங்கலானவர்கள் ,சளி தொந்தரவு உள்ளவர்கள் தலைக்கவசம் அணிவது நோயையும் ,விபத்தையும் உண்டாக்கும் .
தலைக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களின் கவனிப்பின் காரணமாக தலைக்கவசம் கட்டாயம் ஆக்கி உள்ளனரோ ?என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது .
நேற்றும் ,இன்றும் மதுரையில் திரும்பிய பக்கம் எல்லாம் தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து ,வசூல் வேட்டை நடத்தி ,மக்களின் வெறுப்பை காவல் துறை சம்பாதித்து வருகின்றது .பெண்களையும் விட்டு வைக்கவில்லை .சிலர் அபராதம் கட்டப் பணம் இன்றி வாகனத்தை வைத்து விட்டு செல்கின்றனர் . தலைக்கவசம் கட்டாயமாக்கியது தவறு .தெருவிளக்கு மின்தடை காரணமாக எரிய வில்லை .தலைக்கவசம் அணிந்துக் கொண்டு ,இருட்டில் வாகனம் ஒட்டுவதால் விபத்து வரும் . விரும்புபவர்கள் அணியும் நிலையே நீடிக்க வேண்டும் .இந்நிலை தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு வரும் .இந்த வெறுப்பு சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு உண்டு .எனவே முதல்வர் தலையிட்டு தலைக்கவசம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
எந்த அரசாவது, மக்களின் பிரச்னை, படும் அவதிகளை உடனே கண்டு கொண்டதுண்டா? ஆதங்கப் படுவதால்,
பதிலளிநீக்குஎவ்வித பலனுமில்லை.! அரசின் கவனம் இத்தகைய விஷயங்களில், நீதித்துறையினை சார்ந்தே இருக்கும். ராமசாமி போன்றவர்கள், ஹெல்மெட் காரணம் காட்டி, அமல்படுத்தப்பட வில்லை, என்று வழக்கு போடுவார்கள். நாம் தான் திண்டாடிக்கொண்டிருக்க வேண்டும்.