கழுகு .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி

கழுகு                  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி 

இயக்கம் ! சத்திய சிவா

நடிப்பு ! கிருஷ்ணா

இசை யுவன் ! சங்கர் ராஜா

மலை மேல் இருந்து குதித்து
த் தற்கொலை செய்துக் கொள்ளும் பிணங்களை பள்ளத்திற்கு சென்று எடுத்து வந்து ஒப்படைக்கும் கூலித்  தொழிலாளிகள் பற்றிய  கதை.நடிகர்கள் கிருஷ்ணா   ,தேசிய விருதுப் பெற்ற
தம்பி இராமையா,கருணாஸ் ,பேச முடியாத மாற்றுத் திறனாளி பத்திரம்  நான்கு பெரும் அந்தப் பத்திரமாகவே மாறி ,மிக நன்றாக நடித்து உள்ளனர் .இயக்குனர் சத்திய சிவா  நன்றாக வேலை வாங்கி உள்ளார் .படம் முழுவதும் தம் அடிப்பது ,மது குடிப்பது காட்சிகள் மிக அதிகம் .இந்தக் காட்சிகளின் போது புகை பிடித்தால் புற்று நோய் வரும் .உயிருக்கு ஆபத்து ,குடி குடியைக் கெடுக்கும். என்று எழுத்தும் வந்து விடுகிறது.    நான்கு பேரின் தொழில் முறையின் மீதான நட்பில் கதை நகர்கின்றது .படத்தின் கதாநாயகி பிந்து மாதவி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .நல்ல எதிர் காலம் உண்டு .

 கதாநாயகி பிந்து மாதவி காதலிக்கும் தன் சகோதரிக்கு ,தன் மோதிரம் தந்து காதலனுடன் செல்ல வழி   அனுப்பி வைக்கிறார் .காதலனுடன் சென்று இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் .நண்பர் கூட்டணி   பிணத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுகின்றார்கள் .தம்பி இராமையா கூலி குறைவாக பேசியதற்குத் திட்டுகின்றனர் .பிணத்தின் கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணா எடுத்து வைத்துக் கொள்கிறார் .பிந்து மாதவி என் சகோதரி நினைவாக அந்த மோதிரம் கிடைத்தால் கொடுங்கள் என்கிறார் .முதலில் இல்லை என்று பொய் சொன்னவர் பிறகு மோதிரம் தந்து விடுகிறார் .லேசாக காதல் மலர்கின்றது கிருஷ்ணா மீது .முதலில் கிருஷ்ணா காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர் ஏற்கிறார் .

பிந்து மாதவி அப்பா காதலை எதிர்க்கிறார் .ஏற்கெனெவே ஒரு மகளை இழந்தும் ,மறு மகள் காதலையும் எதிர்க்கும் தந்தையை ,கிருஷ்ணா எதிர்த்து பின்  மணம் முடிக்கின்றனர் .மிக இயல்பாக காதல் மலர்கின்றது .
பிணம் தூக்கும் நண்பர்களுக்கு சாவின் வலி தெரிய வில்லை .எப்படா ? பிணம் விழும் .நமக்கு
கூலி வரும் தண்ணி அடிக்கலாம் .என்று வாழ்கின்றனர் .நண்பர்களை பிணமாகப் பார்க்கும்  போது மரணத்தின் வேந்தனை விளங்குகின்றது .இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி இசை இசைத்துள்ளர்.   .கிருஷ்ணா தன் உடம்பில் கயிறைக் கட்டிக் கொண்டு பள்ளத்தில் இறக்கி விடும் காட்சியில் ஒளிப்பதிவாளர் மிக நன்றாக படமாக்கி  உள்ளார் .

ஈவு, இரக்கமற்ற பிணம் தூக்கும் மனிதர்கள் இடையே மனிதாபிமானம் விதைக்கும் நல்ல கவிதையாக திரைக்கதை ,மரணத்தின் வேதனையை, படம் பார்ப்பவர்களுக்கும் உணர்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் .இயக்குனர்  சத்திய சிவா.பசங்க படத்தில் ஆசிரியராக  நடித்து முத்திரைப் பதித்த நடிகர், வில்லனாக வருகிறார் .எந்தப் பாத்திரம் தந்தாலும் மிக நன்றாக நடித்து விடுகிறார் .

பிணத்தைத் தின்ன   மொய்க்க  வரும்   கழுகு .பிணத்தைத் தூக்கி வாழ்க்கை நடத்தும் நண்பர்களின் வாழ்க்கையை  விளக்கும் கதை .பெயர் பொருத்தம் நன்று .காதல் எப்போது வரும் எங்கு வரும் ,யாருடன் வரும் ,எப்படி வரும் .என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது .இந்தப் படத்தில் பிந்து மாதவிக்கு , சகோதரி காதலின் காரணமாகத்  தற்கொலை செய்தபோதும் ,தந்தை எதிர்த்த  போதும் , பிணம் தூக்கும்,குடிப் பழக்கம் உள்ள ஒருவர் மீது காதல் வருகின்றது .காதலுக்கு கண் இல்லை உண்மைதான் .  


வில்லனால்  பலி வாங்கப் பட்ட நண்பர்களின் பிணத்தைப் பார்த்து கதறும் போது கிருஷ்ணா மிக நன்றாக நடித்து உள்ளார் .கடைசியில் வில்லன் அடியாட்கள் கிருஷ்ணாவை வெட்ட வரும் போது ,அந்து வெட்டு பிந்து மீது பட்டு உயிர் இழக்கிறாள் .கடைசியில்  உயிரோடு இருக்கும் கிருஷ்ணா ,இறந்த பிந்துவை கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்யும் முடிவு ஏற்புடையதாக இல்லை .    கடைசியில் காதலர்களை சாகடிக்கும் முறையை தமிழ் இயக்குனர்கள் கை விட வேண்டும் .வாழ்ந்து காட்டும் படி படம் எடுங்கள் .அதிக ஆபாசம் இல்லாமல் ,நல்ல  கதை அம்சத்துடன் மிக இயல்பாக படத்தை இயக்கி உள்ள சத்திய சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள். படம்  பார்க்கிறோம் என்பதையே மறந்து கண் முன் நிஜ நிகழ்வு பார்ப்பதைப்    போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார் .

கருத்துகள்