கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி

கடவுளின் கடைசி கவிதை  !

நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை

நூல் விமர்சனம் 
கவிஞர்இரா .இரவி

வனிதா பதிப்பகம் சென்னை .17.   விலை ரூபாய் 45

நூலின் தலைப்பும் ,நூல் ஆசிரியர் பெயரும் ,அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது  .பாராட்டுக்கள் .முனைவர் நா .இளங்கோ அவர்களின் மதிப்புரை முத்தாய்ப்பாக உள்ளது .துளிப்பாப் பாவலர் புதுவை சீனு .தமிழ்மணி  அவர்களின் அணிந்துரை அழகுரை . நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை என்னுரை எண்ணங்களின் சுருக்க உரை .ஹைக்கூ கவிதை இன்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு ,வாசிக்கப்பட்டு, பாராட்டப் படுகின்றது என்றால் அதற்கு புதுவை ஹைக்கூ கவிஞர்களும் ஒரு காரணம் .புதுவையில் குடும்பத்தோடு ஹைக்கூ கவிதை  எழுதி வருகின்றனர் .அந்த வரிசையில் ஹைக்கூ கவிதையில் தடம் பதித்து உள்ளார் .நூல் ஆசிரியரின் இயற்ப்பெயர் மணிகண்டன் .
நூலின் முதல் கவிதையே விடுதலையின் அவசியம் உணர்த்துவதாக உள்ளது .

கட்டுண்ட கரங்களில்
பாதுகாப்பாய் இருக்கிறது
விடுதலைப் பற்றிய கவிதை !


தந்தை கோபத்துடன் மகனை அடிக்கும் போது உடன் தாய் வந்து தடுக்கும் பாச நிகழ்வு தினந்தோறும் நம் இல்லங்களில் காணும் நிகழ்வு. அதனை காட்சிப் படுத்தும் கவிதை !
.
அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அம்மாவிற்கு வலிப்பதெப்படி ?

தள்ளாத முதுமை வந்தப் பின்னும் பதவியை உடும்புப் போல பிடித்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளின்   பதவி ஆசை
உணர்த்தும்  கவிதை !

நாற்காலி ஆசை
யாரை விட்டது
நாற்காலியில் பொம்மை !

புலம் பெயர்ந்தவர்களின்  மன வலியை மிகவும் நுட்பமாக சொற்ச்சிக்கனத்துடன்  நன்கு அதிர்வு செய்துள்ளார் .

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்
மண்வாசனை !

நடிகைக்கு கோயில் கட்டி உலக அளவில் தமிழகத்திற்கு தலை குனிவை
த் தந்தவர்கள் நம் ரசிகர்கள்  .திரைப்பட ரசிகர்கள் தமிழம் அளவிற்கு உலகில் எங்கும் காண முடியாது .நடிகரின் கட்அவுட்டிற்கு மாலை போடுவார்கள் ,சூடம் காட்டுவார்கள் ,நடிகரை அவதாரம் என்பார்கள் ,பால் அபிசேகம் செய்வார்கள் .எல்லாம் செய்து விட்டு .சொந்தப் பணத்தில் அதிக விலை கொடுத்து சீட்டு வாங்கி திரை அரங்கின் உள்ளே செல்வர்கள் .இந்த இழி நிலையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் .

சொந்த வீடில்லாதவர்கள்
கட்டி முடித்தார்கள்
நடிகைக்கு கோயில் !


இயந்திரமயமான உலகில் இன்று வேகமாக காதல் ,வேகமாக திருமணம் ,மிக வேகமாக விவாகரத்து என்றாகி விட்டது .விவாகரத்து ஆனபோதும் பழைய நினைவுகள் மறப்பதில்லை .

தினமும் கனவில்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி !

பிறந்
து முதல் இறக்கும் வரை வடுவாக இருக்கும் சொல் அனாதை.இந்தச் சொலின் வலியை, சொற்களில் கூறி விட முடியாது .சம்மந்தப் பட்டவர்கள் மட்டும் உணரும் கொடிய  வலி .குற்றம் எதுவும் செய்யாமல் வந்த பழிச் சொல் .

அன்னையும் பிதாவும்
படித்துக் கொண்டிரு
க்கிறது 
அனாதைக் குழந்தை !

உழைப்பாளி உழைப்பாளியாகவே வாழ்கிறான் .எந்த நாளும் முதலாளி ஆவதில்லை தொழிலாளியாகவே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் . ஏழை மேலும் ஏழை ஆகிறான் .கடின உழைப்பிற்கு ஈடு இல்லை இல்லை என்று பொன்மொழி உள்ளது .கடின  உழைப்பாளி கடின  உழைப்பாளியாகவே வாழ்கிறான்.பெரிய முன்னேற்றம் வரவில்லை .

எத்தனை வீடு கட்டினாலும்

வாடகை வீட்டில்தான்
சித்தாள் !


கடவுளின் கடைசி  கவிதை என்ற நூலின் தலைப்பிற்கும் பொருந்தும் கவிதை !

பரமனுக்கு  தெரியாது
பாமரனுக்கு தெரியும்
பசியின் வலி !

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் ஒழிந்த பாடில்லை .பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாம் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்வதுக் கண்டு வேதனையில் உள்ளனர் .

பெண்ணிற்கு
தலை தீபாவளி
அப்பாவிற்கு தலைவலி !

எள்ளல் சுவையுடன் சென்ரியு,ஹைக்கூ ,லிமரைக்
கூ மூன்று  வடிவிலும்    முத்தாய்ப்பாக கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்
கிடைக்கவில்லை கவிதை !


எள்ளல் சுவையுடன் சிந்தனை விதைக்கும் படைப்புகள் உள்ளது .

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
கருமியின் இல்லத்தில் திருட்டு !

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீதிமன்றங்களில் நடக்கும் நடைமுறை உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் .

நீதி மன்றத்தில்
முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை !


குறியீடாக சில கவிதை உள்ளது .இந்தக் கவிதைப் படித்ததும் என் நினைவிற்கு ஈழத்தமிழர் வந்தனர் .

நாளையாவது கிடைக்குமா
பூனைகள் தேசத்தில்
எலிகளுக்கு சுதந்திரம் !

நாகரீக உலகில் நகரத்தில் சிலர் குளிக்க விட்டாலும் வாசனை திரவியம் இட்டுச் செல்வதை கவனித்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .

வாசனை திரவிய
த்தை
மறக்கவில்லை
குளிக்க மறந்தவன் !


பகுத்தறிவு விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது .

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடுபோனது
பத்திரகாளி சிலை !


அரசியலில்  இன்றைய  அவள் நிலையை தோலுரித்துக் காட்டும் துணிவு மிக்க ஹைக்கூ !

கள்ளச்சாராயம் விற்றவன்
அமைச்ச
ரானதும் முதல் நிகழ்ச்சி
காந்தி சிலைத் திறப்பு !

மனம் குறித்து ஒரு கவிதை இதோ !

தெளிந்த  நீரில்
முகம் பார்த்தபிறகும்
தெளியாத மனசு !

புகழ்ப் பெற்ற
ப் புதுவை கவிஞர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் 
--

கருத்துகள்