விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி .ஸ்ரீவில்லிபுத்தூர். அணிந்துரை கவிஞர் இரா .இரவி

விதைகள் விழுதுகளாய் ...

நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி
.ஸ்ரீவில்லிபுத்தூர்.


அணிந்துரை கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய்  90

சின்னச் சின்ன துளிகள் பிரவாகமாய் வருவதுப்போல  நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் மனதில் அவ்வப்போது  தோன்றிய சின்னச்சின்ன கவித்துளிகளைச் சேகரித்து இன்று முழு நூலாக பிரவாகமாக வலகி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .
உள்ளத்தில் உள்ளது கவிதை .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் எதுகை  மோனை என்ற இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தராமல் ,முற்போக்குக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து புதுக்கவிதை படைத்துள்ளார்கள். பாராட்டுக்கள் .ஹைக்கூ வடிவிலும் பல கவிதை உள்ளது .பரப்பரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்துகொண்டே ,கவிதையும் எழுதுவது பாராட்டிற்குரியப் பணி.

இவருக்கு கவிதை எழுதிட நேரம் எப்பொழுது கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .
மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளார்,  சிந்தனையாளர் திரு .வெ.இறையன்பு . இ.ஆ .ப .அவர்கள் குறிப்பிடுவார்கள் .. ஒய்வு என்பது படுத்துத் தூங்குவதுஅல்ல .வழக்கமான பணிகளான வீடு,அலுவலகம்  தாண்டி நமக்குப் பிடித்தமான இலக்கியப் பணியில் ஈடுபடுவதுதான் ஒய்வு. இலக்கியம் இதயத்தை இதமாக்கும். நம்மை ஆற்றுப்படுத்தும் .புத்துணர்வு தரும் .புதுப்பித்துக் கொள்ள உதவும் .நூல் ஆசிரியர் கவிஞர்  சி .அன்னக்கொடி கவிதை எழுதுவதால் தான் ,அவரால் வழக்கறிஞர் தொழிலும் வெற்றிகரமாக முத்திரைப் பதிக்க முடிகின்றது .என்று அறுதி இட்டுக் கூறிடலாம்  .
இந்த நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் ,பதச்சோறாக  சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு ..

பெண் கன்று
போட்டபோது இனித்த  மனசு !
பெண் பிள்ளை பிறந்தபோது
கசந்து போனது ..!

பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படும் அவள் நிலையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

வெங்காயம் அறுத்தவன்
கண்ணீர் சிந்தினான் ..!
விற்றவனும் கண்ணீர் சிந்தினான் .

உண்மைதான்
வெங்காயம்  மிகவும் மலிவாக விற்கும் போது, உழைத்திட்ட விவசாயி வஞ்சிக்கப்படும்  உண்மையை  தோலுரிக்கும்  கவிதை.
கவிஞரின் பார்வை வித்தியாசமானது .இனிமையான தேனை நூல் ஆசிரியர் எப்படிப் பார்கின்றார் பாருங்கள் .

தேன் கூடு கலைத்த போது
தேனீ சிந்திய ரத்தம்
தேன் ..

மனிதாபிமானம் போல பறவை அபிமானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை ..

என்னை அதிகாலையில்
எழுப்பியது
என் வீட்டு சேவல்
நான் அறுக்கப் போவது அறியாமல் ..!

இந்தக் கவிதைக்காகவே நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களை பாராட்ட வேண்டும் .தான் ஒரு வழக்கறிஞர் என்ற நிலை மறந்து உண்மையைப் பதிவு செய்துள்ளார் .

காடிற்காக
வழக்குப் போட்டான் ...!
வீட்டையும் இழந்துவிட்டான் ..!


தன்னம்பிக்கை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன  .அவற்றில் ஒன்று .

துணிந்து நில் ..!
சூரியனைக்
கூ
சுட்டெரிக்க முடியும் ...!

இன்றைய  பல பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்கான   ஒரே வழி நதி நீர் இணைப்பு .அந்தத் தீர்வை வலியுறுத்தும் விதமாக உள்ள கவிதை இதோ ..!

இணையுங்கள்
கங்கை காவிரியை
கண்ணீர் தேசத்தை
ண்ணீர் தேசமாக
மாற்றுவதற்கு ..!      


சில கத்துக்குட்டிகள் நதி நீர் இணைப்பு தேவையற்றது என்று சொன்னபோதிலும் ,முதிர்ந்த அனுபவசாலிகளின் கருத்து   பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு என்பது .மதுரைப் பொறியாளர் திரு காமராஜ் அவர்கள் நதி நீர்ச் சாலை என்ற திட்டமே அரசுக்கு அனுப்பி உள்ளார். அது நிறைவேற வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி  அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் .
இல்லத்தரசி பற்றிய கவிதையைப்  படிக்கும் எல்லோரும் அவரவர்
இல்லத்தரசியின் தியாகத்தை ,தொண்டை நினைத்துப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை .

மூன்று முடி
ச்சுக்கா
மூன்று தலைமுறைக்கும்
உழைக்கின்றா
ளே  
அவள் தியாகத்திற்கு ஈடேது ...!


உண்மைதான் கணவன் ,மகன் ,பேரன் என்று மூன்று தலைமுறைக்கும் உழைக்கும் மனைவியை மனதாரப் போற்றப் பட வேண்டும் .இப்படிப் பல கவிதைகளின் தொகுப்பு நூல் இது .தொடர்ந்து இது போன்ற  கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற என் வாழ்த்துக்களைச் சொல்லி முடிக்கின்றேன் .

கருத்துகள்