மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மனசோடு பேசு

நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அட்டைப்பட  வடிவமைப்பு ,உள்ளடக்க கவிதைகள் அச்சு ,புகைப்படங்கள்
அனித்தும் மிக நன்று.பாராட்டுக்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் சி
.அன்னக்கொடி அவர்கள் வழக்கறிஞர் தொழில் வெற்றிகரமாகச் செய்துக் கொண்டே
கவிதையும் எழுதுவது பாராட்குறியப் பணி.இருதய அறுவை சிகிச்சைக்காக
மருத்துவமனையில் இருந்தப் போது  எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி
உள்ளார்கள் .நூல் ஆசிரியர் பெயர் அன்னக்கொடி.அன்னம் என்ற பறவை பாலில்
கலந்து இருக்கும் நீரை பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்தும்
என்பார்கள் .அதுப்போலத் தீயவைகளைத் தள்ளிவிட்டு , நல்லவைகளை   மட்டும்
கவிதையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் என்னுரையில் சில நூல்கள் பேசுவோனை ஊமையாக்கும் .என் நூல்
ஊமையைக் கூடபேச வைக்கும் நம்புகிறேன் .தன்னம்பிக்கையோடு
குறிப்பிட்டுள்ளார் .கவிஞர் சுரா அவர்களின் வாழ்த்துரை ,திரு. குருமனோகர
வேல் அவர்களின் கனிந்துரை  ,முனைவர்.க .ச .புகழேந்தி அவர்களின் அணிந்துரை
என யாவும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

சுனாமி கண்ட ஜப்பான் பற்றி
வாழ்க உன் தேசம்  என்ற தலைப்பில்

இரண்டாம் உலகப் போரின் காயச்சுவடுகள்
இன்னும் காய்ந்தபாடில்லை !
தழும்புகளை தனக்குள் வைத்துக் கொண்டு
தரணியில் தனக்கென ஒரு தடம் பதித்தவன் !

தத்துவப் பாடல்களும் நூலில் உள்ளது .மரணத்தைக் கண்டு அஞ்சி தினம் தினம்
செத்துப் பிழைப்பவர்கள் உண்டு .அவர்களுக்கான கவிதை

என் அழுகை எனக்கல்ல  ...!

மரணம் என் இதய வாசலின் கதவைத் தட்டினாலும்
மாலைப் போட்டு வரவேற்பேன் !
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் கோழை !
மரணத்தை எதிர்கொள்ள எந்த நேரத்திலும்
தயாராயிருப்பவனே  மனிதன் !

முனகல் சத்தம் என்ற கவிதையில் ஏழைக் கிழவியின் நிலையைப் படம் பிடித்துக்
காட்டி கண்ணில் கண்ணீர் வர வைக்கின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் சி
.அன்னக்கொடி.
 தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகள் உள்ளது .இந்த வைர வரிகளை இன்றைய
இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோல்வி எனக்கல்ல !

காட்டாற்று  வெள்ளம் கடந்து செல்வேன் !
பெரும்பாறையே என் மீது மோதினாலும் சிதறுண்டு போகும் !
வானமே விழுந்தாலும் எழுந்து நிற்பேன் !
பெருந்தீயே சுற்றிச் சுழன்றாலும் தட்டிவிட்டுச் செல்வேன் !
சிறு நோயே நீ என்ன செய்ய முடியும் என்னை நீ
சுற்றி வந்தாலும்  சுழன்று வந்தாலும் தோல்வி உனக்குத்தான் !
அப்போலோ அதிசயிக்கும் வண்ணம் எழுந்து நிற்பேன் !
அகிலமும் அதிரும் வண்ணம் உயர்ந்து நிற்பேன் !

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த வீட்டுக்காரகள் பற்றி அறிந்து கொள்வதில்லை
.இயந்திர வாழ்க்கையானது இன்று . நாங்களும் சொந்தக்காரகள் என்ற கவிதையில்
நன்கு பதிவு செய்துள்ளார் .

பட்டாசு ஆலை தீ விபத்து அடிக்கடி நடப்பது நாம் அடிக்கடி படிக்கும்
செய்தியானது .அதில் உயிர் பலி நடப்பதும் வாடிக்கையாகி விட்டது .
மீனவன் !
கடல் அலையில் மிதக்கிறான்
பட்டாசு ஆலைத் தொழிலாளி
கந்தக ஆலையில் மிதக்கிறான்
பல உயிர்களைப் பலி வாங்கும்
பட்டாசு ஆலை பட்டுப் போகாதோ !
எனக்குத்தான் வேறு தொழில் கிடைக்காதோ !

மனிதாபிமானம் தாண்டி விலங்காபிமானம் விதைக்கும் கவிதை.
உள்ளது .மாடுகளுக்கு கால் சுடக் கூடாது என்று லாடம் கட்டும் பழக்கம்
இன்றும் உள்ளது  நடைமுறையில் .மாட்டிற்கு உதவுகிறோம் என்ற பெயரில்
துன்புறுத்துகின்றனர் .இந்தச் செயலைப் பார்த்து நானும் மனம்
வருந்தியதுண்டு .அதற்கு விடை  சொல்வதுப் போல ஒரு கவிதை இதோ !

காளைக்கும் காலணி போடுங்கள்
காயப்படுத்தாதீர்கள் - என்றான் தம்பி
பதில் சொல்லத் தெம்பில்லை அப்பாவுக்கு !

ஆசை ஆசையாய் கவிதையில் வித்தியாசமான ஆசைகளை எழுதி உள்ளார் .கிராமிய
மொழியில் சில கவிதைகள் மண் வாசம் தருகின்றன .கருப்பாயி  கிழவி கவிதை
நன்று .கண்ணகி கவிதை வித்தியாசமானப் பார்வை !
ஈழத்தைப் பற்றி பாடாமல் இருக்க முடியாது .மனிதாபிமானம் மற்றவர்கள்தான்
ஈழம் பற்றி பாடுவதில்லை .

நீ வரும் வரையில் !
கைகளை இழந்தாலும் கால்களை இழந்தாலும்
நீ இந்த ஈழ தேசத்தை மீட்டெடுக்கும் வரை
சுருங்கிய விழிகள் மட்டும் திறந்தே இருக்கும் !

ஆம் ஈழத்தாயின் கனவு மட்டுமல்ல ,நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி
.அன்னக்கொடிகனவு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் கனவும் ஈழத்தில்
தமிழன் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் .கனவு நனவாகும்
நாள் விரைவில் வரும் .
செருப்பு பேசுவதுப் போல ஒரு கவிதை நன்று .என் சொகாகக் கதையைக் கேளு !
பறவையின் சோகத்தை உணர்த்தி வெற்றிப் பெறுகின்றார் .வாசகர் மனதில்
விழிப்புணர்வு விதைத்து வெற்றிப் பெறுகின்றார் .உளத்தில் உள்ளது கவிதை
.உண்மை உரைப்பது கவிதை.என எண்ணச் சிதறல்களை கவிதையாக்கி ,கவி விருந்தைப்
படைத்துள்ளார் .பாராட்டுக்கள்

கருத்துகள்