யாருமில்லை என்றான போது !
நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்
விலை ரூபாய் 75 . நந்தினி பதிப்பகம் கோவை
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இது வெறும் கவிதை நூல் அல்ல .ஈழத்தின் உரிமைக் குரல் .புத்தக வடிவில் உள்ள கேள்விக் கணைகள் .நூலைப் படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுடன் செல்லிடப் பேசியில் பாராட்டி விட்டு நீங்கள் ஈழத் தமிழரா ?என்று கேட்டேன். அவர் இல்லை நான் கோவையில் பிறந்த தமிழ் நாட்டுத் தமிழர் .என்றார் .மதுரையில் உள்ள பேராசிரியர் முனைவர் இ .கி .இராமசாமி அவர்களின் வகுப்புத் தோழர் என்றார் .இந்த நூலை எனக்கு அறிமுகம் செய்தவர் முனைவர் இ .கி .இராமசாமி.
அச்சாகி வெளி வந்தவுடன் நான் அனுப்பும் முதல் நூல் இது .கெழுதகை நண்பர் இ .கி .ரா .அவர்களுக்கு என்று எழுதிய காரணத்தால் முனைவர். இ .கி .இராமசாமி அவர்கள் ,நூலை எனக்கு அனுப்பாமல், படி எடுத்து அனுப்பி வைத்தார்கள் விமர்சனத்திற்கு. புகழ்ப் பெற்ற கவிஞர்களான சிற்பி ,தமிழன்பன், புவியரசு ஆகியோரின் அணிந்துரை கவிதை நடையிலேயே மிகச் சிறப்பாக உள்ளது .
சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியபின் இன்று உலகம் அறிந்தது ஈழப்படுகொலையை .அனால் அன்றே இன உணர்வாளர்கள் பலர் குரல் கொடுத்தப் போதும். இந்த உலகம் குறிப்பாக நம் நாடு கண்டு கொள்ள வில்லை .வேடிக்கை பார்த்த குற்றவாளிகளின் கன்னத்தில் அறைவதுப் போல இந்த நூல் கவிதைகள் உள்ளது .உள்ளத்து உணர்வை ,கொதிப்பை ,கோபத்தை ,மனித நேயத்தை கவிதையாக்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .இவரது இயற்ப்பெயர் சந்திர சேகர் .ஈழத் தமிழருக்கு நடந்த கொடுமைகள் கண்டு குமுறும் எரிமலையாக் கவிதை வடித்துள்ளார் .
யாருமில்லை என்றான போது என்ற இந்த நூலை ஈழத் தமிழரைக் காக்க யாருமில்லை என்றான போது தமிழ் இனத்தையே கொன்று குவித்த கொடூரத்தை சுட்டும் விதமாக உள்ளது .
என்ன செய்வதாக !
அடக்கினீர்கள் , ஒடுக்கினீர்கள், பறித்தீர்கள்
எரித்தீர்கள் , வெட்டினீர்கள் ,விரட்டினீர்கள்
சுட்டீர்கள் ,அழித்தீர்கள் இன்னும்
என்னவெல்லாமோ செய்தீர்கள்
நாங்கள் அப்படியே இருக்கிறோம்
நாங்கள் இன்னும் வலுவாக இருக்கிறோம் !
ஈழத் தமிழரின் விடுதலைக்கான உரிமைக் குரலாகவே ஒலிக்கின்றது கவிதைகள் !
சாதல் என்பது வாழ்தல் !
நாங்கள் செத்துக் கொன்டிருந்ததாலேயே
நாங்கள் செத்துப் போனோம் என்பதல்ல பொருள்
நாங்கள் சாகவில்லை என்பது பொருள்
உங்களால் அழிக்க முடியாது என்று பொருள்
நாங்கள் வலிமையாக எழுவோம் என்பது பொருள்
எல்லாம் நல்லபடியாக !
எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன
சாமியார்கள் பஜனை செய்து கொண்டிருக்கிறார்கள்
நடிகைகள் காதல் காட்டிக் கொண்டிக்கிறார்கள்
தலைவர்கள் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்
முதலாளிய நிறுவனங்கள் கொழுத்துக் கொண்டிருக்கின்றன
அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
சாராயக் கடைகள் கோயில் குளங்கள் கடைத் தெருக்கள்
விளையாட்டுக்களங்கள் இன்னும் இன்னும் எல்லாமும்
நல்லபடியாகவே நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன
எங்களையும் கொன்று கொண்டிருக்கிறார்கள்
நாங்களும் செத்துக் கொண்டிருக்கிறோம்
நீங்களும் பார்த்துக் கொண்டிருங்கள் நல்லபடியாக !
ஈழத் தமிழர் படுகொலையின் பொது எனக்கென்ன என்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்த தமிழ்நாட்டுத் தமிழரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் .
இங்குள்ள உண்மையான தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் ,மனித நேயம் மிக்கவர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர் . ஆனால்
ஒரு சில அரசியல் வாதிகள் முதலை கண்ணீர் வடித்து நாடகம் நடத்தினார்கள் .அதனை குறிப்பிடும் கவிதை இதோ !
அறிவிப்பு வேண்டாம் என அறிவிப்பு !
உங்களிடம் ஒரு வேண்டுகோள்
எங்களுக்கு உதவுவதாக அறிவிக்காதீர்கள்
எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவிக்காதீர்கள்
நாங்கள் உங்கள் இனம் என்று
எங்களுக்காகப் போராடுவதாக அறிவிக்காதீர்கள்
அறிவிப்பு என்ற சொல்லே எங்களுக்கு
அருவெறுப்பாக இருக்கிறது .
ஈழத் தமிழரின் உள்ளக் குமுறலை ஈழத் தமிழர் கூற்றுப் போலவே கவிதையைப் பதிவு செய்துள்ளார் .இலங்கையில் தமிழினம் அழிய எல்லா உதவிகளும் செய்துவிட்டு இன்று அமைதி மறுவாழ்வு என்று போலி வசனம் பேசும் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
அமைதியின் பெயர்
நல்லது
எங்கள் சாம்பல் காடுகளுக்கு இனி
உணவு கொடுக்கலாம் உடை கொடுக்கலாம்
அமைதி வந்துவிட்டது எனவே எல்லாமே தரலாம் !
அயல் நாட்டில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி இன்று உலகிற்கு அம்பலப் படுத்து உள்ளது .ஆனால் தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் ஈழச் செய்தி வர விடாமல் கவனமாக இருந்து தமிழ் இனத் துரோகம் செய்ததை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது .
ஈழத் தமிழர்கள் என்ன கேட்டார்கள் விடுதலை கேட்டார்கள் .விடுதலை கேட்பது குற்றமா ? காந்தியடிகள் விடுதலை கேட்டது குற்றமா ? சிந்திக்க வைக்கும் கவிதைகள் நூலில் உள்ளது .
நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு ஒரு வீடு ஒரு நாடு
நாங்கள் பேசுவதற்கு ஒரு மொழி ஒரு இனம்
நாங்கள் உழைப்பதற்கு ஒரு நிலம்
நாங்கள் உண்பதற்கு ஒரு கவளம்
நாங்கள் மூச்சு விட வேண்டும் அதற்காக ஒரு உரிமை
மக்கள் அற்ற தேசம் !
யுத்தம் முடிந்துவிட்டது அமைதி வந்துவிட்டது
கலவரங்கள் அடங்கி விட்டன
கொல்லப் பட்டவர்கள் எரிந்த நெருப்பின் வாசம்
திசைகள் முழுவதும் வெப்பமாகக் கவிழ்ந்திருந்தது !
இப்படி நூல் முழுவதும் இலங்கையில் நடந்த கொடூரத்தை கவிதைகளால் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .மனித நேயத்துடன் ஒரு படைப்பாளியின் கடமையை மிக சிறப்பாகச் செய்துள்ளார்.பாராட்டுக்கள் . தமிழ் இனத்தை திட்டமிட்டு கொடூரமாக அழித்த இலங்கைக் கொடூரன் ராஜபட்சே உலக அரங்கில் தண்டிக்கப் படும் நாளை ,இந்த நூல் ஆசிரியர் உள்பட உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து உள்ளோம் .

கருத்துகள்
கருத்துரையிடுக